Sunday, 16 January 2011

கலைஞர்களின் காலம்.

ஒரு கலைஞனின் பொற்காலம் எப்போது இருக்கும்? சிலருக்கு அவர்கள் துறைக்கு வந்த ஆரம்ப காலமாக இருக்கலாம் , சிலருக்கு வந்து சில பல வருடங்கள் கழித்து இருக்கலாம் , சிலருக்கு மிக வயதான பிறகு அமையலாம். ஆனால் எந்த ஒரு கலைஞனுக்கும் ஆரம்பம் முதல் இறுதி வரை பொற்காலமாக , அவனது அவளது சிருஷ்டி தன்மை உச்சமாக இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது ஒரு வரம், அது கோடி கலைஞர்களில் ஒருவருக்கே அமையும்.

இங்கே தமிழனான நான் மற்ற கலைகளான நடனம், வாய்ப்பாட்டு, வாத்திய இசை , மேற்கத்திய இசை , சாஸ்திரிய சங்கீதம் தற்காப்பு கலைகள், ஓவியம் , சிற்பம் , சிந்தனையை தூண்டும் பேச்சு,இலக்கியம், கவிதை , எழுத்து,நாடகம்  போன்றவற்றை எழுத வாய்ப்பு மிகவும் குறைவு என்று இதை படிக்கும் பிற தமிழர்களான நீங்கள் அறீவிர்கள்.

இப்போது நான் சொல்ல வருவது தமிழ் சினிமா புள்ளிகள் பற்றிதான், அதிலும் சமீப காலமாக மணிரத்தினம், கமல் போல சில பல வருடங்கள் முன்பு பெரும் கலைஞர்களாக மதிக்கப்பட்டு வந்தவர்களின் படம் இப்போது வந்த சுவடே தெரியாமல் போவதை பார்க்கும்போதுதான் இதை பற்றி நினைத்து பார்த்தேன்!

தமிழில் (இது எந்த மொழிக்கும் பொருந்தும்) இது வரை எந்த பெரும் கலைஞனும் 15 ஆண்டுகளுக்கு மேல் ப்ராகசித்ததில்லை என்று துணிந்து கூறலாம்.

பாலசந்தர்
பாரதிராஜா
பாலு மகேந்திரா
மகேந்திரன்
சிவாஜி கணேசன்
கமல் ஹாசன்

போன்றவர்கள் உதாரணம்!

ஒரு காலத்தில் தென்னாட்டின் சத்யஜித் ரே என்று சொல்லுமளவு புகழ் பெற்றிருந்த பாலச்சந்தரின் கடைசி படமான பொய் - படத்தை வாங்க ஆளில்லை.

பாரதிராஜா கடைசி இரண்டு வெற்றி படங்கள் என்ன தெரியுமா (கிழக்கு சீமையிலே மற்றும் ....)

பாலு மகேந்திரா கடைசியாக கொடி நாட்டிய படம் மறுபடியும்.

சிவாஜி கணேசன் பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம், தங்க பதக்கம் (1975) படத்திற்கு பிறகு வெளிவந்த அவரது சுமார் 100 படங்களில் பார்க்க முடிவது சுமார் 3 படங்கள் மட்டுமே ! மற்றவற்றில் பெரும் தொப்பையுடன் அதை மறைக்க ஒரு கோட் அணிந்து மக்களை சித்ரவதை படுத்தி இருப்பார்.

இப்போது மணிரத்தினம் மற்றும் கமல்ஹாசனும் அந்த லிஸ்டில் சேர்ந்து விட்டார்கள். இப்போது கமல் மற்றும் மணிரத்தினம் படத்தை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு இந்த செய்தி. நீங்கள் இவர்களை விமர்சனம் செய்வதை விட்டு விடலாம் , ஏனெனில் நாம் அவர்களின் கடந்த கால சாதனைகளுக்கு செய்யும் மரியாதை நிகழ்கால மவுனம் மட்டுமே.

இதையும் மீறி இவர்கள் நாளைக்கு சிறந்த படங்களை அளிக்கலாம் , ஆனால் அதற்கான probability மிகவும் குறைவு. (சிவாஜிக்கு ஒரு முதல் மரியாதை அமைந்த மாதிரி)

இப்போது opposite camp இல் இருக்கும் எம்.ஜி.ஆர் , ரஜினி போன்றோரை பார்ப்போம்! அவர்கள் கடைசி வரை super hits குடுப்பார்கள் , ஏனெனில் அவர்களின் பதவி ஒரு கட்டத்திற்கு மேல் பெரும் சிருஷ்டிகரதன்மை தேவை படாத பதவி. மேலும் அவர்கள் முதலில் இருந்தே மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையே தன் வெற்றிக்கு காரணமாக வைத்து இருப்பவர்கள் அதன் மூலம் அவர்களின் பிம்பம் சினிமாவை தாண்டிய பிம்பமாகவே இருக்கிறது. இதனால் இந்த 'கடைசி கட்ட' தோல்விகளில் இருந்து அவர்கள் லேசாக தப்பிப்பார்கள்.

3 comments:

தர்ஷன் said...

ம்ம் நீங்கள் சொன்னது உண்மைத்தான் இதில் காலமாற்றம் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது என நினைக்கிறேன். காலத்திற்கு தகுந்தாற்போல் தம்மை இற்றைப்படுத்திக் கொள்பவர்களே நெடுங்காலத்திற்கு நீடிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து தனது கலையுலக வாழ்வில் உச்சத்திலேயே இருந்தவர் ஒரே ஒருவர்தான். அவர் பெயரைத்தான் சின்னக் குழந்தையும் சொல்லுமே

Gokul said...

சூப்பர் ஸ்டாரை தானே சொல்றீங்க!? அவர் கோடிகளில் ஒருவர்.

ஆனால் அவரது அந்தஸ்திற்கு முக்கியமான காரணம் மூன்று
1. பந்தயத்தில் இருந்தே வெளியேறிய கமல்ஹாசன்
2. காமெடியே செய்ய முடியாத விஜயகாந்த்
3. தமிழர்களின் உளவியல் சிக்கலான (சங்க காலம் முதல் இருந்து வரும்) Hero Worship!

Vasu. said...

கலையுலகமாகட்டும் அரசியலாகட்டும், உச்சத்தில் இருந்த ஒரே ஒருவர் MGR தான். அவரை போன்ற ஒருவர் இனி வரவே முடியாது. எத்தனை பெரிய சவால்களை சந்தித்தார்? கருணாநிதி தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து பார்த்தார். அவரை அசைக்க கூட முடியவில்லை.