Thursday, 20 January 2011

நாம் சமுதாய குடிமகனா(ளா)?

சமீப காலமாக திரு ஜெயமோகன் அவர்களின் எழுத்தை படித்த பின் வந்த சிந்தனை இது.அவரது கூற்றுப்படி நம்மை சுற்றி உள்ளவர்கள் (உங்களையும், என்னையும் சேர்த்துதான்) நவீன குடிமக்களாக ஆகவில்லை, இன்றும் மனதளவில்  சுமார் 100 வருடங்கள் பின்தங்கியே இருக்கின்றனர். இது எனக்கு சரியாகவே படுகிறது , இந்த பெங்களூரில் கார் ஓட்டினால் இந்த எண்ணம் சந்தேகமில்லாமல் ஊர்ஜிதமாகிறது.

நான் தகவல் தொழில்நுட்பத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில் எனக்கு அறிமுகமான அமெரிக்க ஆங்கில வார்த்தை "community". இதற்கு அர்த்தமாக In human communities, intent, belief, resources,preferences, needs, risks, and a number of other conditions may be present and common, affecting the identity of the participants and their degree of cohesiveness. என்று கூறுகிறது Wikipedia.

மேலும் சுருக்கமாக, A community has been defined as a group of interacting people living in a common location என்று கூறுகிறது Wikipedia.

ஆனால் நாம் community என்பதற்கு ஒரு சிறப்பான பொருள் வைத்து இருக்கிறோம், அது நம்மை சுற்றி உள்ள மனிதர்கள் அல்ல, நாம் வாழும் இடம் அல்ல, சில பல நூற்றாண்டுகளுக்கு முன் பிரிந்த ஒரு clan என்பதே நாம் நமது community என்பதற்கான அர்த்தமாக கொண்டுள்ளோம்.இதில் கவனிக்க வேண்டிய விஷயம், என்னை பொறுத்தவரை wikipedia-வின் தரும் விளக்கம் சில நூற்றண்டுகளுக்கு முன்பு இந்த சாதிகளுக்கு பொருந்தி வந்து இருக்கிறது.ஆனால் இந்த 21-ஆம் நூற்றாண்டில் அல்ல!

இந்த நிலை மாறாதவரை ஊழலை, பொது சுகாதாரத்தை , மனித உரிமையை, உண்மையான ஜனநாயகத்தை, அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தை, மற்றும் பல பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியாது.

இந்த மாற்றத்தை எப்படி கொண்டு வருவது? இது சாதாரண மாற்றம் அல்ல, இது மிக மிக உறுதியான சாதியத்தையும் , படித்தவர் படிக்காதவர் வித்தியாசத்தையும் , இன்னும் பல புரையோடி போன விஷயங்களை மாற்ற வல்லது, இதற்கு வரும் தலைமுறையினரை ஒரு 'குடிமகனாக' , நம் நாட்டின் அங்கத்தினனாக அதன் நிர்வாக இயந்திரத்தின் சிக்கல்கள் தெரிந்தவனாக , ஒரு நவீன கால கட்ட குடிமகனின் கடமையையும் , உரிமையையும் அறிந்தவனாக உருவாக்க வேண்டும். அதற்கு கல்லூரி பாட திட்டத்தில் குடிமையியலை (civics) ஒரு பாடமாக வைக்க வேண்டியது அவசியம்.

இப்போது இது பள்ளிக்கூடங்களில் பாடமாக இருக்கிறது. அதாவது பத்தாவது வரைக்கும். இது உச்ச நீதிமன்றம் / இது நாடாளுமன்றம் என்ற அளவில். ஆனால் அதை கல்லூரி காலங்களில் மாணவர்களுக்கு குடுத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் பயனை தரும்.

நாம் நம் கல்லூரிகளில் ஏன் குடிமையியலை (civics) ஒரு கட்டாய பாடமாக வைக்க கூடாது? இன்று கல்லூரி முடித்து வரும் 100-க்கு 5 மாணவர் கூட ஒரு குடிமகனாக , நவீன சமூகத்தின் அங்கமாக வாழ தகுதி கொண்டவர் இல்லை என்று துணிந்து கூறலாம். நான் சொல்வது பணம் சம்பாதிக்கும் திறமையையோ , பிற கருவிகளான வாகனம் , வங்கி , அரசு இயந்திரம் போன்றவற்றை உபயோகபடுத்துவதிலோ இல்லை , மாறாக தன்னுடைய இனம், மொழி, வட்டாரத்தை தன்னுடைய அடையாளமாக கொள்ளாமல் தான் வாழும் ஊரின், மாநிலத்தின், மாவட்டத்தின், தேசத்தின் ஒரு அங்கத்தினனாக தன்னை அடையாளம் கண்டு கொள்வதில் இருந்து ஆரம்பிக்கறது.

தமிழகத்தின் Elementary Education ஆன B.E , மற்றும்  M.B.B.S, B.Com, B.Sc, B.A, B.B.A என்று இருக்கும் எல்லாம் மாணவர்களும் இதனை படிக்க வேண்டும் , அதன் மூலமே , அவன் / அவள் கல்லூரியில் இருந்து வெளியே வரும்போது அரசு எதிர்பார்க்கும் குடிமகனாக வருவார்கள், இல்லை என்றால் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகத்தான் வருவார்கள். இதில் B.L படிப்பவர்கள் இப்போதே அதனை படிக்கிறார்கள்.

அந்த பாடதிட்டத்தில் குடிமகனது கடமை, உரிமை, பொது சொத்து பராமரிப்பு, அரசு நிர்வாக இயந்திரத்தின் பாதைகள்,அடிப்படை சட்ட அறிவு , ஜனநாயகம் குடிமக்களுக்கு குடுக்கும் உரிமைகள் என்று அனைத்தும் இருக்க வேண்டும், மேலும் தனி மனித உரிமை , தனி மனித விடுதலை, ஜாதி பற்றிய விழிப்புணர்வு , Consumer Rights , மனித உரிமை மீறல் பற்றிய case study, குறிப்பாக Right to Information Act (RTI)/ அது போன்ற சட்டங்கள்  போன்றவை இடம் பெற வேண்டும். நம்மை சுற்றி media கட்டும் பிம்பம் , mass media-வை எப்படி அணுகுவது போன்றவையும் பாடமாக இருக்கலாம்.இந்திய ஏன்  ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தது? அது ஏன் கம்யூனிஸ்ட் நாடாக இல்லை , நக்சலைட்டுகள்  என்றால் யார், அவர்கள் ஏன் உருவானார்கள்? நாம் ஏன் சோசியலிசம் என்ற கொள்கையில் இருந்து liberalization முறைக்கு மாறினோம், அதற்கு என்ன காரணம்?  அதற்கான எதிர்ப்பு ஏன் வருகிறது? ஆதரவு ஏன்? இன்றைய சூழ்நிலையில் ஒரு அரசுக்கான கடமைகள் என்ன?இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? மற்ற நாடுகளில் ஜாதி உள்ளதா? ஜாதியின் நன்மை தீமை என்ன? ஒட்டு போடுவதின் நன்மை , நமது எம்.எல்.ஏ-வின் கடமை என்ன, எம்.பி.யின் கடமை என்ன? ஒரு தானியம்/உணவு பொருள் எப்படி விலை நிலத்தில் இருந்து நமது வாய்க்கு வருகிறது? இவற்றை பற்றிய ஒரு தெளிவான பார்வை கல்லூரி விட்டு வெளியே செல்லும் மாணவனுக்கு வரவேண்டும். மேலும் ஒரு மாணவனுக்கான உரிமை, கடமை பற்றியும் அவனுக்கு ஒரு புரிதல் வேண்டும்.

இது ஒரு optional paper-ஆக இருக்காமல் , 4/5 வருடம் படிக்கும் ஒரு compulsory paper-ஆக இருக்க வேண்டும். இதற்கான ஒரு real time project paper வைத்தால் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்! இதன் மூலம் நிச்சயம் ஒரு சமூக மாற்றம் கொண்டு வர முடியும்.

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

Try to get this book- A Better India , A Better world by Narayanamurthy (Infosys).

He has clearly adviced what we have to learn from west (capitalistic countries). sample is below:


The role of Western values in contemporary Indian society is a subject on which I have pondered for years. I come from a company that is built on strong values. Further, various stakeholders of our company, including employees, investors, customers and vendor-partners come from across the globe. In this context, over the years, there are several aspects of the Western value system that I have come to appreciate. Moreover, an organization is representative of society, and some of the lessons that I have learnt from the West regarding values are, I think, applicable to us as a nation. Here are some of them:

http://www.karnataka.com/personalities/narayana-murthy/western-values.html

ராம்ஜி_யாஹூ said...

Siddharth Venkatesan - Buzz - Public
நல்ல கட்டுரை ... "அறம் என்பது…"


http://www.jeyamohan.in/?p=11514

http://www.jeyamohan.in/?p=11514
2 people liked this - Manjoor Raja and செல்வன் S
ramji yahoo - சுட்டியமைக்கு நன்றிகள் சித்தார்த்
முதலாளித்துவம் உருவாக்கிய முக்கியமான பண்பாட்டு கொடை என்பது குடிமையுணர்ச்சிதான். ஐரோப்பாவில் முதலாளித்துவம் உருவாகி வந்த இருநூறு வருடங்களில் மெல்ல மெல்ல அது தன் அறவியலையும் அழகியலையும் அரசியலையும் உருவாக்கிக்கொண்டது. குடிமையுணர்ச்சியே அதன் மிகப்பெரிய அறம். தன்னை ஒரு குடும்பத்தின், சாதியின், மதத்தின் உறுப்பினனாக எண்ணாமல் மொத்தச்சமூகத்தின் உறுப்பாகக் கண்டு அது கோரும் எல்லா கடமைகளையும் புறக்கட்டாயம் இல்லாமல் செய்வதுதான் குடிமையுணர்ச்சி


இன்போசிஸ் நாராயணமூர்த்தி இதை சொல்லி உள்ளார். மேற்கத்திய (ஐரோப்பா, அமெரிக்கா, ப்ரிடனியா நாடுகள், மக்களிடம் நாம் கற்று கொள்ள வேண்டியவை எவை)

There are two pillars of the value system.
1.Loyalty to the Family
2. Loyalty to the community

Indian society has, for over 1000 years, place loyalty to the family ahead of loyalty to the society.

on the other hand, The West has a greater much focus on loyalty to the society than to the family.

In the west, there is respect for community. Parks free of litter, clean street, public toilets clean- these are the examples of a society that respects the community and its spaces. In India we keep our houses clean and water our gardens every day but when we go to a public park, we do not think twice before littering the place.EditJan 18 (edited Jan 18)

Gokul said...

ராம்ஜி,

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி , உண்மையை சொல்ல வேண்டும் என்றால் , இந்த பதிவிற்கு நான் பெரிதாக எந்த பின்னூட்டத்தையும் எதிர்பார்க்கவில்லை. உங்களின் பின்னூட்டம் raises my morale.

நாராயண மூர்த்தியின் கட்டுரை / புத்தகம் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் படித்ததில்லை. நிச்சயமாக இது நாராயணமூர்த்தி போன்றவர்களுக்கு முன்பே வந்து இருக்கும்.

ஆனால் அவர் நான் சொன்ன Civics as a subject in university என்ற விஷயத்தையும் தொட்டு இருக்கிறாரா என தெரியவில்லை , நீங்கள் படித்து இருந்தால் குறிப்பிடவும்.(நானும் புத்தகத்தை வாங்க முயற்சிக்கிறேன்)