Saturday, 29 January 2011

கமல் - தனி வாழ்வின் உக்கிரம் (நிகழும் அற்புதம்)
மேலே உள்ள படத்தில் இருப்பது கமலின் மகள் ஸ்ருதி கமல்ஹாசன்! இந்த படம் இந்த பதிவிற்கு மிகவும் முக்கியமானது. நான் கமல் பற்றி எழுதிய கடந்த பல பதிவுகள் அவருக்கு எதிராகவே எழுதி இருக்கிறேன்.

ஆனால் இந்த படம் அவரின் படங்களை பற்றி அல்ல, அவரின் தனி வாழ்வை பற்றி, அவரின் தனி வாழ்வில் அவர் கடைபிடித்து வரும் உக்கிரமான நேர்மை பற்றியது.

இங்கே நேர்மை என நான் கொள்வது மனதிற்கும் புத்திக்கும் உண்மையாக நடந்து கொள்வதை, எதன் பொருட்டும் சமாதானம் அடையாமல், போலித்தனம் இல்லாமல், பொய் இல்லாமல்  வாழ்வதை! (உடனே அவர் சில படங்களை ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடித்தார் என பஜ்ஜி சுட  வேண்டாம் .. நான் சொல்வது அவரது சொந்த வாழ்வை).

பொதுவாக இந்தியாவில் விவாகரத்தை செய்தவர்கள் அடுத்த மணவாழ்வை மிக மிக ஜாக்கிரதையாக அணுகுவார்கள் , உண்மையிலேயே பிரச்சினை என்றாலும் அதனை பொறுத்து கொண்டு வாழ்வார்கள். 

இதை படிக்கும் பலர் இதனை கண்டும், கேட்டும் அனுபவித்தும் இருப்பார்கள்.

இரண்டாவது விவாகரத்து என்பது தென்னிந்தியா சினிமா நடிகர்களுக்கே மிகவும் புதிது.இரண்டாவது விவாகரத்து முடிந்து , அவர் தேர்ந்தெடுத்தது Living Together relationship. அவர் அவரது துணைவியான கௌதமியுடன் சிவாஜி வீட்டு திருமணம் உட்பட பல திருமணங்களுக்கு வந்தார்.

அடுத்து அவருடைய மகளுடைய தொழில், இது வரை நீங்கள் எந்த தென்னிந்தியா சினிமா நடிகருடைய மகளாவது சினிமாவில் அதுவும் கவர்ச்சியாக நடித்து பார்த்து இருக்கறீர்களா?

அது மட்டுமல்ல அவரது முதல் விவாகரத்து மூலம் அவரது வீட்டு சொந்தங்கள் அவரை விட்டு விலகியது , சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாதவர்கள் பட்டியலில் இருந்தது சாருஹாசன் (கமலின் அண்ணன்), சுகாசினி (அண்ணன் மகள்) , மணிரத்னம் (அண்ணனின் மருமகன்).

சுருதி ஹாசன் ஒருமுறை தன் திருமணம் பற்றி கூறும்போது "தன் திருமணம் பற்றி அப்பாவிடம் கூறினால் முதலில் வாழ்த்து தெரிவித்து விட்டுதான் பிறகு மாப்பிள்ளை யார் என கேட்பார் " என கூறி இருந்தார்.

இப்படி தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் தம்பி, கணவன் , தந்தை என்ற எந்த பாத்திரத்திற்கும் (தன் சுயத்தை இழப்பதால்) தன்னை விட்டு குடுக்காமல் வாழ்பவரை நீங்கள் பார்த்ததுண்டா?

குடும்ப உறவு முறையை விட்டு குடுத்து வாழ்வது ஒரு சாதனையா என்று கேட்பவர்கள் தமிழகத்தில் வாழ தகுதி இல்லாதவர்கள் , ஏனெனில் கடந்த பல  வருடங்களாக தமிழக அரசியலில் இருந்து வரும் முக்கிய பிரச்சினை குடும்ப(திற்குள் வரும்) அதிகார போர்.
அதை தவிர்த்து பார்த்தாலே , இங்கே இந்தியாவில் - விளையாட்டில், அரசியலில் , சினிமாவில் , வியாபாரத்தில்  உள்ள முக்கிய பிரச்சினை nepotism (தமிழில் நேரடி மொழிபெயர்ப்பு இல்லை, உற்றார் உறவினர்களுக்கு செல்வாக்கான ஆட்களின் உதவி என்று வேண்டுமானால் சொல்லலாம் இல்லையென்றால் கலைஞரின்/சசிகலாவின் குடும்ப ஆட்சி என்று சுருக்கமாக கூறலாம்). இந்த nepotism பிரச்சினைக்கு முதல் காரணம் குடும்ப உறுப்பினரை பகைத்து கொள்ள முடியாத அமைப்பு , அதன் மூலம் தொடர்ச்சியான சமரசங்கள் ,சமாதானங்கள்,பேரங்கள்...

மேலும்
இதை நீங்கள் எப்படி பார்க்கறீர்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய முதல்வரே மனைவியும் / துனைவியுமாக 'வளம்' வருகிறார். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிற்கு 'சட்டப்படியே' இரண்டு மனைவியர்.பல வட்ட/மாவட்ட/எம்.எல்.ஏ/எம்.பி/அமைச்சர்களுக்கு "சண்டேன்னா ரெண்டு" (அவரவர் ரேஞ்...அய்யா பெரிய ஆளுங்க....,அவங்க பெரியவங்க , இவங்க சின்னவங்க),கர்நாடக முன்னாள் முதல்வர் H.D.குமாரசாமி பற்றி சமீபத்தில் வெளியான தகவல் கன்னட நடிகை குட்டி ரேவதியை (தமிழில் இயற்கை படத்தில் நடித்தவர்) இரண்டு வருடம் முன்பு திருமணம் செய்து கொண்டார், தற்போது ஒரு குழந்தை , இதை முன்னாள் முதல்வர் மறுக்கவில்லை.


சினிமா உலகை எடுத்து கொண்டால் நம் கண் முன்னே தெரிபவர் ஜெமினி கணேசன் , விஜயகுமார் , புரட்சி தலைவர்! அடுத்த தலைமுறையில் பிரபு (ரகசிய திருமணம் செய்து பிறகு கைவிட்டார் என்று குஷ்பு பகிரங்கமாக பேட்டி அளித்தார்) , கார்த்திக் (இரு மனைவியர் , தன் மனைவியின் சகோதிரியையே இரண்டாம் மனம் செய்து கொண்டார்). பாலு மகேந்திரா நடிகை மௌனிகாவை திருமணம் செய்து கொண்டார் , ஆனால் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு சரத்குமார்! வெகுகாலம் கழித்து பட்டியலில் சேர்பவர்கள் பிரகாஷ்ராஜ் / பிரபுதேவா.


ஆனால் மேலே சொன்ன அனைவரை விட கமல் இந்த விஷயத்தில் மிக மோசமாக பார்க்க படுகிறார். மேலே சொன்ன அனைவருக்கும் / கமலுக்கும் இருக்கும் வித்தியாசம் ..கமல் இரண்டு மனைவியருடன் எப்போதும் வாழவில்லை, மேலும் எதையும் ரகசியமாக செய்யவில்லை. இது போன்ற விஷயங்களை எப்போதும் ரகசியமாக செய்யும் தமிழர்களின் குலவழக்கதிற்கு மிக மிக எதிரானது இது. தமிழகத்தில் சமூக மட்டத்தில் மேலே செல்ல செல்ல தவறுகள் மறைக்கப்படும் / மறுக்கப்படும் / நியாபடுத்தபடும் என்ற ஆணாதிக்க சொகுசு இருந்தும் அவர் இதை செய்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் தன் படங்களில் அவர் கற்பு எனும் விஷயத்தையும் / காதல் எனும் விஷயத்தையும் அணுகும் விதத்தை கவனித்தால் தெரியும், தான் நம்புவதை தன் படங்களில் சொல்ல துணியும் மனப்பான்மையை.

அவர் படங்களில் அவர் என்றுமே "காதல் ஒருமுறைதான் வரும்" (நன்றி : விஜய் மற்றும் டி.ராஜேந்தர்) என்று வசனமோ காட்சி அமைப்போ வைத்ததே இல்லை, அதைவிட முக்கியம் காதல் இரண்டாம் முறை வரும் என்பதை மீண்டும் மீண்டும் காண்பித்து இருக்கிறார், அதற்கு அவர் படங்களில் இருந்து பெரிய பட்டியலே போடலாம்

-சிப்பிக்குள் முத்து
-வேட்டையாடு விளையாடு
-மும்பை எக்ஸ்பிரஸ் (இதில் வில்லனின் சின்ன வீடுதான் ஹீரோவின் காதலி)
-மகாநதி
-தேவர் மகன்
போன்றவை சில.

இது மற்ற 'புனித காதல்' படங்களில் இருந்து எவ்வளவு மாறுபடுகிறது என்பதை கவனியுங்கள்.மொத்தத்தில் எதிர் கலாச்சாரத்திற்கு தமிழகத்தில் மிக முக்கியமான பிரதிநிதி கமல்ஹாசன்.

1.இதை பெண் நடிகைகளில் செய்து காட்டியவர் ராதிகா மற்றும் லக்ஷ்மி , அவர்களை பற்றி தனி பதிவே போடலாம்.
2.இதில் மற்றொரு விஷயம் ஒரு பெண்ணை / ஆணை பார்த்து காதலித்து , திருமணம் செய்து  கடைசி வரை வாழ்பவரை பற்றி இங்கே பேச்சில்லை, அவர்களுக்கு my warm regards!

9 comments:

தர்ஷன் said...

தனி மனித வாழ்வில் கமலின் நேர்மை பாராட்டத்தக்கதே

Gokul said...

தர்ஷன்,
வருகைக்கு நன்றி!

Mohan said...

நன்றாக தொகுத்து அளித்திருக்கிறீர்கள்!

Gokul said...

மோகன்,
வருகைக்கு நன்றி!

கெக்கே பிக்குணி said...

ரொம்ப அவசியம் நாட்டுக்கு, இந்த பதிவு:-( எதுக்குச் சொல்றேன்னா, நேர்கோட்டில அலசிச் சிந்திக்கிறீங்க, வாழ்க்கையில் இந்த analytical mindஐ வைத்து முன்னேற வாழ்த்துகள்.

நானும் பெரிய கமல் ரசிகை. "கற்பு" என்பது ஆண், பெண் இருவருக்கும் பொது என்பதையும் தனிவாழ்வில் (பிறர் மனையாயிருந்த‌ கௌதமி) பயின்று வருகிறார். பொது வாழ்வில், அதுவும் தம் படங்களில் அப்படிக் காட்டியிருக்கிறாரான்னு தெரியலை.

Gokul said...

கெக்கே பிக்குணி (என்ன பேருங்க ..) ரொம்ப தாங்க்ஸ் , எனக்கு analytical mind இருக்குன்னு சொன்ன முத ஆளு நீங்கதான் .. மத்தபடி கவுதமிக்கு divorce ஆகிடுச்சு அப்படின்னு நினைக்கிறேன் தெரியலை .. அவர் படங்களில் அப்படி காட்டி இருக்கிறாரா அப்படின்னு தெரியலைன்னு சொல்றீங்க ..அதுக்குதான் என்னோட analytical mind யூஸ் பண்ணி பட பட்டியல் தந்து இருக்கேன்...

கெக்கே பிக்குணி said...

ஸோ...., புத்தியை நல்லபடியா செலவழியுங்க‌. சினிமாவை விட்டுட்டு உங்க மத்த பதிவுகள் நல்லா இருக்கு. தொடருங்கள்!

வருண் said...

அவர் படம் ராம் லக்ஷ்மன் ல யானை அவருக்கு தம்பி. இதுலயும் எதுவும் சொல்ல வர்றாரா?

கோகுல்!

நீங்க சொல்றபடி பார்த்தால் கமல், சினிமால வருகிற மேட்டர் எல்லாம் அவர் "கருத்து" "சமுதாசீர்திருத்தத்துக்காக" செய்றாருனு சொல்றீங்களா? உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியகளை தீவிரவாதி போல காட்டுவதும் அவர் உள்ளத்தின் வெளிப்பாடா??? இல்லையா? ஏன்??

சினிமால இவர் அந்த கதாபாத்திரமாத்தானே இருக்கனும்? இல்லையா?

தசாவதாரத்தில் வர்ற நம்பி என்கிற மதவாதி மூலம் என்ன சொல்ல வர்றாரு?

எப்படியோ கமல் புகழாரம் பாடலைனா உங்களுக்கு தூக்கம் வராது போல!

ஷ்ருதி தெலுகுல இதுபோல எல்லாத்தையும் காட்டியும் படம் ஓட மாட்டேங்கிதாம் பாவம்! :(

Gokul said...

வருண்,
நம் நாட்டில் ஒருவர் ஒரு நல்ல விஷயத்தை பண்ணி புகழ் பெற்றால் அவரிடம் அனைத்து விஷயங்களுக்கும் கருத்து கேட்பது / எதிர்பார்ப்பது ஒரு வழக்கம் . Infosys நாராயணமூர்த்தியிடம் ஒலிம்பிக்ஸ் தங்க மெடல் பற்றி கேட்பது , விஞ்ஞானி அப்துல் கலாமிடம் ஆரம்ப கல்வி பற்றி கேட்பது என்று சொல்லி கொண்டே போகலாம்.

நீங்களும் அந்த Trap-இல் விழுந்து விட்டீர்கள் போல .. என்னுடைய பழைய பதிவுகளை படித்தாலே நான் கமலை புகழ்ந்ததை விட விமர்சித்ததுதான் அதிகம் என்று உங்களுக்கு தெரியும்.

இந்த பதிவு கமலின் தனி வாழ்க்கை பற்றியே , ஒரு மேலதிக தகவலாக அவர் தன் படங்களில் காட்டி இருக்கும் 'ஆண்-பெண்' உறவை (கவனிக்க ஆண் பெண் உறவை மட்டுமே மற்ற எந்த விஷயத்தையும் இல்லை) சொல்லி இருக்கிறேன்.

//கமல், சினிமால வருகிற மேட்டர் எல்லாம் அவர் "கருத்து" "சமுதாசீர்திருத்தத்துக்காக" செய்றாருனு சொல்றீங்களா?//

அப்படி நான் சொல்லவே இல்லையே , கூறப்போனால் இந்த பதிவு அவரது சினிமா பற்றியே அல்ல.

//ஷ்ருதி தெலுகுல இதுபோல எல்லாத்தையும் காட்டியும் படம் ஓட மாட்டேங்கிதாம் பாவம்//

அட ஆமாங்க , பேசாம நான் ஷகீலா பத்தி சொல்லி இருந்தா நல்லா இருந்து இருக்கும் இல்லை (அவர் படம் நல்லா ஓடுச்சே) , நீங்களும் படம் ஓடலை அப்படின்னு கமெண்ட் எழுதி இருக்க மாட்டிங்க.. தெரியாம போச்சே..

ராவணன் கதை கேட்டு 'தெனாலி' ராமன் சிரிச்சாராம் , கேட்டதுக்கு, ஒத்தை மூக்கில சளி பிடிச்சாலே பெரும்பாடு , இதில பத்து மூக்கில எப்படின்னு.. அப்படி இருக்குது கதை.