சில நாட்களாய் இந்த கேள்வி மனதில் எழுகிறது. வட்டார வழக்கு இன்று பெரிதும் நம் திரைப்படங்களில் இடம் பெறுகிறது(காதல், பருத்திவீரன், ஆடுகளம், தூங்காநகரம், சுப்ரமணியபுரம் என்று நிறைய உதாரணங்கள் சொல்லலாம்). ஆனால், இது சமீபத்தில் தான் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது. தேனி மண்ணை சேர்ந்த பாரதிராஜா "பதினாறு வயதினிலே" படத்தில் தன் மக்கள் அன்றாடம் பேசும் மொழியை திரையில் திணிக்கவில்லை.
அதே போல் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்ட பல பழைய திரைப்படங்களில் வட்டார வழக்கே இல்லை. பாகப்பிரிவினை, விவசாயி, மணியோசை, பட்டிக்காடா பட்டணமா என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். அவிய்ங்க, இவிய்ங்க, சுதானம், ஆட்டையை போடறது, லந்து போன்ற சொற்கள் இப்போது தான் அதிகம் பேசப்படுவதை பார்க்கிறோம். அதே நேரத்தில், "அனுபவி ராஜா அனுபவி" படத்தில் வரும் "முத்துக் குளிக்க வாரீகளா" போன்ற வட்டார வழக்கை கொண்டு எழுதப்பட்ட பாடல்கள் ஒன்றிரண்டு உண்டு.
ஆக, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, சென்னை என்று அந்தந்த ஊரில் இது தான் மொழி என்று திரைப்படங்களின் வாயிலாக நமக்கு தற்போது அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புது வார்த்தைகள் எப்போது அந்த மக்களின் அன்றாட பேச்சு வழக்கில் கலந்தன?
1 comment:
அக்காலத்திலும் வட்டார மொழி படங்கள் உண்டு.
கட்டபொம்மன், முதல் மரியாதை, கடல் மீன்கள், சவால் எனப் பல படங்களில் வட்டார் மொழி பயன்பாடு உண்டு
Post a Comment