Sunday, 13 February 2011

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....



அமைச்சர் ஒருவர் தன் துறையின் அதிகாரியிடம் கடிந்து கொண்டாராம் "5 நிமிஷம் பேசறதுக்கு உரை எழுதி தர சொன்னா , நீ எழுதி தந்ததை படிச்சு முடிக்க 10 நிமிஷம் ஆச்சேய்யா" அப்படின்னு.. அதிகாரி சொன்னாராம் "சார் நீங்க xerox காப்பியும் சேர்த்து படிச்சிட்டிங்க,அதனாலதான் extra அஞ்சு நிமிஷம் "..... இந்த ஜோக்கை  நான் படிச்சு ஒரு பத்து வருஷம் ஆச்சு .. ஆனா இப்போ நம்ம S.M.கிருஷ்ணா தாத்தா (இந்திய வெளியுறவு துறை அமைச்சர்) அந்த ஜோக்கை மெய்பித்து விட்டார்.


ஐ.நா சபை கூட்டத்தில் , அதிகாரி தவறுதலா குடுத்த போர்துகீசிய அமைச்சரின் உரையை படிக்க ஆரம்பிச்சுட்டார் , ஒரு 3 நிமிஷம் கழிச்சு அந்த உரையில் "போர்ச்சுக்கல் மொழி பேசும் பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய இரு நாடுகளின் உறுப்பினர் இங்கு இருப்பது.." அப்படின்னு வந்துச்சு , அப்பாவும் நம்ம தாத்தாவுக்கு தெரியலை ஆனா ஐ.நாவுக்கான இந்திய தூதர் ஹர்தீப்சிங் பூரி அதை கண்டுபிடிச்சுட்டார் (இப்பவே கண்ணை கட்டுதே..). நம்ம கிருஷ்ணா தாத்தாகிட்ட (பத்திரிக்கை) பஞ்சாயத்து ஆபீஸ் ஆளுங்க கேட்டப்போ அவரு சொன்னது என்னன்னா "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா".

No comments: