சமீபத்தில் வாசு குடுத்த சுஜாதாவின் திருக்குறள் - ஒரு எளிய உரை என்ற நூலை படித்தேன். சிறு வயதில் இருந்து திருக்குறள் படித்து இருந்தாலும் (நன்றி: மனப்பாட பகுதி) அவற்றின் அதிகப்படியான திணிப்பு ஒரு வகையில் அதனை வெறுக்க காரணமாக இருந்தது.
இப்போது பல வருடங்கள் கழித்து இந்த எளிய உரையை படிக்கும்போது "திருக்குறளுக்கு இவ்வளவு எளிய உரை எழுதி என்னை போன்றவர்களையும் படிக்க வைத்த சுஜாதா அவர்களின் மேதமையை புகழ்வதா அல்லது குறளில் உள்ள கருத்துகளுக்காக வள்ளுவரை புகழ்வதா" என்று தெரியவில்லை. இருவரையும் புகழும் அருகதையும் எனக்கில்லை என்றும் தெரிகிறது.
பல குறள்கள் புகழ் பெற்று இருந்தாலும், அறிமுகம் ஆகாத சில வைரங்களும் இருக்கத்தான் செய்கின்றன...எனக்கு பிடித்த சில குறள்கள்
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
பொருள்: அரசன் தன்னை சுற்றிலும் உள்ளவர்களை ஒரு சமமாக பார்க்காமல் அவரவர் தகுதிக்கு ஏற்ப கவனித்தால் அவர்கள் நிலைத்து நிற்ப்பார்கள்.
இது இன்றும், எந்த முதல் அமைச்சருக்கும், அமைச்சருக்கும், எந்த அதிகாரிக்கும், முதலாளிக்கும், எந்த மேனேஜருக்கும் பொருந்தும் சொல்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்(து)
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
பொருள்: விவேகமுள்ளவர்கள் பகைவரை பார்த்த உடனே எகிற மாட்டார்கள் . மனத்தில் அடக்கி தக்க சமயத்துக்கு காத்திருப்பார்கள்.
இது பற்றி கொஞ்சம் சிந்தித்து பார்த்தாலே போதும், நம்மை சுற்றி உள்ளவரிடையே இதற்கு உதாரணம் கிடைத்து விடும்.மேலும் விவரங்களுக்கு சோனியா காந்தியை அணுகவும்.
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
பொருள்: பணத்தால் செய்யக்கூடியதைச் செய்யாதவனின் சொத்து நிலைக்காது.எது பணத்தால் செய்யக்கூடியது? நண்பனோ ,உறவினரோ மிகுந்த பணமுடையாய் இருக்கும் சமயம்
செல்வந்தனின் பணம் அதற்கு உதவ வேண்டும். எல்லோரும் கூடும் சமயத்தில் செல்வந்தனின் பணம் உதவ வேண்டும், பஞ்ச காலத்தில் உதவ வேண்டும், நெருக்கடியான காலகட்டத்தில் உதவ வேண்டும். இதை செய்யாதவனின் சொத்து நிலைக்காது என்கிறார் வள்ளுவர். இதில் சொத்து என்பதை செல்வந்தனின் மகிழ்ச்சி அல்லது மதிப்பு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்தில் இப்படி கூறுகிறார்,
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நானற பழி
"பொருள் : உறவுகள் இல்லாதவரை நம்ப கூடாது. பற்று இல்லாததால் பழிக்கு அஞ்ச மாட்டார்கள்"
...................

7 comments:
Good one gokul ... neengal yen oru thelivurai eludha kudathu ?
saran,
thanks.kavalaiye padaadhinga ..seekkiram yezhudharen.
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நானற பழி
"பொருள் : உறவுகள் இல்லாதவரை நம்ப கூடாது. பற்று இல்லாததால் பழிக்கு அஞ்ச மாட்டார்கள்"
perverse thinking.
Such thinking is predicable in children. But we give it up when we cross childhood.
Coz the porul of this is not only a half truth but also immoral.
Valluvar here throws moral out
of window. Not only here but in many kurals he cares little for social morals.
திருக்குறள் ராசிபலன் மாதிரி. எல்லாருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. வள்ளுவர் அவர் காலத்தில் பார்த்த மனிதர்களை வைத்து இதை எழுதி இருக்கலாம்
அருமை Gokul.... திருக்குறள் மனித உணர்வுகள மைய படுத்தி எழுதப் பட்டிருக்கு... காலப்போக்குல மனிதர்கள் மாறியிருக்கலாம் ஆனா மனித உணர்வுகள் மாறமத்தான் இருக்கு... அதனால தான் இன்றைக்கும் திருக்குறள் நமக்கு பொருந்தி போகுது...
அமலன்,
வருகைக்கு நன்றி. உங்கள் கருத்து சரிதான், ஆனால் இந்த குரல் பொருட்பாலில் வருகிறது. அதாவது ஒரு வேலை செய்பவனை தேர்ந்தெடுக்கும்போது பார்க்க வேண்டியதை சொல்கிறது.
இது ஒரு சிறந்த குறள், ஆனால் 100% எல்லா காலத்திற்கும் பொருந்தாது,
- உதாரணமாக இப்போதும் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் திருமணமான (அரசு வேலை கிடைக்காத) நபர்களையே அதிகம் தேர்ந்தெடுப்பார்கள், காரணம் 'பொறுப்பாக வேலை செய்வார்கள் என'.
-இதை நம் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி பொருள் கூறுவதென்றால் இப்படி கூறலாம் "2 years bond போடாமல் freshers-ஐ வேலைக்கு எடுக்காதே...அல்லது employee reference இல்லாமல் வரும் resumes reject செய்".
இப்போதும் சென்னையில் பல அண்ணாச்சி கடைகளில் வேலை செய்வது தென்மாவட்டத்து மக்களே ...ஏன்? இந்திய வரிவிதிப்பில் HUF (Hindu Undivided Family) என்ற entity ஏன் இருக்கிறது ?
ஏனெனில் நாம் இன்னும் நேர்மையான வேலைக்காரனை / முதலாளியை எதிர்பார்க்கவில்லை.
வள்ளுவம் ஒரு நிலபிரபத்துவ நூல், நாம் அதில் ஒரு கால் வைத்து கொண்டு இருக்கிறோம்.. (மற்றொரு கால் அமெரிக்க capitalist market-இல் இருக்கிறது, அங்கே விசா கிடைப்பதற்கு உங்கள் மதிப்பெண் சான்றிதழ்களும் , நிதி ஆதார bank balance சான்றிதழும் போதும்)
அனிதா,
வருகைக்கும் / கருத்துக்கும் நன்றி!
//அதனால தான் இன்றைக்கும் திருக்குறள் நமக்கு பொருந்தி போகுது//
ஆம் 99%.
Post a Comment