Saturday, 16 April 2011

மரணம்இரண்டு வாரங்களுக்கு முன் பணி முடித்து பின்னிரவு வீடு திரும்பும் போது ஏதோ ஒரு எப்.எம் அலைவரிசையில் டி.எம்.எஸ் உணர்ச்சிகரமாக பாடிக்கொண்டிருந்தார்.

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

ஏழு வயது சிறுவனாக தாயின் சிதைக்கு எரியூட்ட நின்ற அந்த கணங்கள் கண் முன் வந்து போனது. ஏதோ ஒரு சொல்ல முடியாத சோகம் தொண்டை குழியை அடைத்தது. இந்த நிமிடம் என்னை மரணம் தழுவினால் என்ன நடக்கும் என்று யோசித்தேன். வெறும் சடலமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு போய் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாய் இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் கழுத்தை கட்டிக்கொள்ளும் குழந்தை அதே பாசத்துடன் என் சடலத்தை கட்டிக்கொள்ளுமா என்று யோசித்தேன்.

இரண்டு நாட்களுக்கு இந்த பாடலே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக இதையெல்லாம் மறந்து அன்றாட பிரச்சனைகளுக்கள் மீண்டும் சுழன்று கொண்டிருக்கும் போது அதெப்படி நீ என்னை மறக்கலாம் என்று மரணம் என்னை கோபித்துக் கொள்வது போல் இருந்தது நான் படித்த அந்த செய்தி.

"பாடகி சித்ரா அவர்களின் மகள் துபாய் நீச்சல் குளம் ஒன்றில் மரணம்".
உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தாக வேண்டும் என்பது நியதி. ஆனால், தன் குரலால் உலகை எல்லாம் மயங்க செய்த சித்ரா, அடக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாய் விளங்கும் சித்ரா, எப்போதும் இறைவன் நாமம் சொல்லும் சித்ரா, கடுகளவும் பிறர்க்கு தீது நினைக்காத சித்ரா, அவருக்கா இந்த தண்டனை?

அன்பே சிவம் படத்தில் சொல்வது போல், "என்ன மாதிரி கடவுள் இது?" பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் துயரப்பட்டு அதன் பின் பிறந்த குழந்தை. அதுவும் "autism" குறைபாடுள்ள குழந்தை. எதற்கு பத்து வருடங்கள் அவரை துன்புறுத்தி, பின்னர் குறையோடு ஒரு பிள்ளையை கொடுத்து அதையும் எட்டு வயதில் பிடுங்கிக் கொள்ள வேண்டும்? பூமியில் இருந்து கொண்டு செல்ல ஆட்களுக்கா பஞ்சம்?

உறவை பிரிந்து வாடும் சித்ரா மற்றும் அவர் குடும்பத்தாருக்கு நம் அனுதாபங்கள்.

4 comments:

sury said...

கடந்த மூன்று வருடங்களாக ஏசியானெட் நிகழ்ச்சியிலே தினமும் இரவு 8 மணி முதல்
சின்னக்குயில் சித்ரா அவர்களைப் பார்த்துக்கொண்டு அவரது இசைப்புலமை தனை
ரசித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு சித்ராவின் துயரம் பெரிதும் பாதிக்கிறது. அவருக்கு
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

சுப்பு ரத்தினம்
மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com

Viji said...

You said it...."enna madiri kadavul edhu?"

I was watching "Anbae sivam" today and was thinking about Chitra, exactly the same lines where crossing through my mind....

Heartfelt condolences to Chitra and family! Death in whichever forms it comes is scary...

"dehino 'smin yatha dehe
kaumaram yauvanam jara
tatha dehantara-praptir
dhiras tatra na muhyati"
though these words we listen to everyday, its really hard to face death... very good post... touching!

Seven years mmm? really sad Vasu... my heart goes for that child who lost his mom at that early an age... Hats off to your Dad!

PS: I'm asking you again, how on earth you manage to write posts in Tamil??? onu rendu post kae naan thanaritaen :(

Vasu. said...

Sury,

வருகைக்கு நன்றி. நானும் சித்ராவின் ரசிகன். கொஞ்சம் கூட கலப்படம் இல்லாத அவர் அடக்கம் என்னை பெரிதும் கவர்ந்த பண்பு.

Vasu. said...

Viji,

Thanks for the comment. Try Google Transliteration. Initially might be a little difficult but you will get used to it. Check out sometime.