Thursday 27 March 2008

கேப்பையும் கேவுறும் -5

இலக்கியம்

தமிழிலக்கியத்தில், வட மாவட்டங்களின் பங்கு பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் ஒரு பொது வாசகனாக, வட மாவட்ட எழுத்தாளர்கள்
மிகவும் குறைவு என்ற அளவிற்கு தெரியும்.

தமிழகத்தின் தென்கோடியில் ஒரு சுந்தர ராமசாமியோ, ஒரு ஜெயமோகனோ உருவாகும்பொழுது, வடகோடியில் ஒருவராவது இருக்க வேண்டாமா?
எனக்கு தெரிந்த அளவிற்கு அப்படி யாரும் இல்லை.

ஒரு முறை, ஒரு நல்ல கவிதையை ஒரு எழுத்தாளினி திருவள்ளூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் இருந்து எழுதியிருந்தார்.

அதை பற்றி எழுதிய அமரர் சுஜாதா , எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் கவிதைகள் வருகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த அளவிற்குதான் வட மாவட்டத்தை பொருத்தவரை இலக்கியம் இருந்து வந்துள்ளது.

இதில் ஸ்வரஸ்யமான் விஷயம் என்னவென்றால், சுஜாதவின் மனைவி வேலுரை சேர்ந்தவர்.

இதே போல் பாலகுமாரன் ஒரு கட்டுரையிலோ, கதையிலோ ஒரு மருத்துவமனை பற்றி குறிப்பிடும்பொழுது, பின் வருமாறு குறிப்பிடுவார்,
"என்ன இருக்கிறது வேலூரில், அங்கே ஒரு சி.எம்.சி (மருத்துவமனை) வரவில்லையா?" என்று கேட்டு இருப்பார். எனக்கு அப்போது, தோன்றிய பதில்
"அங்கேயும் மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களிற்காகத்தான் மருத்துவமனை".

மதுரைக்கு தெற்கே கரிசல் மண்ணின் இலக்கியம் உருவாகும் போது விழுப்புரத்திற்க்கு வடக்கேயும் ஏதோ ஒரு மண் உள்ள்து அல்லவா? அது கரிசல் மண்ணோ அல்லது களி மண்ணோ, அங்கேயும் அதே போல மனிதர்கள் உண்டல்லவா, அங்கேயும் விவசாயமும், வறுமையும், பெண்ணடிமைத்தனமும், நிலப்பிரப்புத்துவமும், சாதீய அடக்குமுறையும்,மனித உரிமை மீறல்களும் உன்டல்லவா?

பின்பு அங்கே ஏன் மண் சார்ந்த இலக்கியம் உருவாகவில்லை? அல்லது உருவானாலும், அது ஏன் ஒரு கரிசல் மண்ணை போன்று ஒரு தாக்கத்தை
உன்டாக்கவில்லை?

அதனால்தான், கேப்பை ஒரு மண் வாசனை வீசும் சொல்லாக, கேவுறு ஒரு கொச்சை சொல்லாக இருக்கிறது.

இதுதான் எனது வாழ்க்கை, இதுதான் எனது சொல்லாடல், இதுதான் எனது மொழி என்று சொல்லும் துணிவு 50-களில்,60-களில் தனித்தமிழ்
இயக்கத்திற்கு வ ந்தது போல இப்பொழுது வட தமிழகத்திற்கும் வர வேண்டும்.

தென் தமிழகத்திற்கு கரகாட்டம் , ஒயிலாட்டம் போன்றது,வட தமிழகத்திற்கு தெருக் கூத்து, நானே எனது தாத்தா சொல்லி இதை கேட்டு இருக்கிறேன்.
இந்த தெருகூத்தின் வரலாறு மகேந்திர பல்லவன் காலத்தில் இருந்து தொடங்குகிறது. ஆனால் இந்த தெருக்கூத்திற்கு கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற ஒரு தொன்மைக்கலை என்ற மரியாதை இருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான்.

வட தமிழகத்தின் பேச்சு, அதன் பூகோள அமைப்பால் உன்டானது. பல படை எடுப்புகளாலும், இஸ்லாமிய, விஜய நகர (தெலுங்கு, மற்றும்
கண்ண்டம்)செல்வாக்கினாலும் உருமாறியது, அந்த உச்சரிப்பை, சொற்களை இந்த பின்புலம் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.

வட இந்தியாவில் ஏன் மிகப்பெரிய , மிகப்பழமையான இந்து கோவில் இல்லை என்று யாரேனும் கேட்க முடியுமா? அதைப்போலவேதான் இதுவும்.

இது தெரியாமல் வட தமிழகத்தை சார்ந்த பலரும், தமிழை,தமிழிலக்கியத்தை குறிப்பாக நவீன தமிழ் இலக்கியத்தை திருச்சியை தாண்டி உள்ளதாகவே
நினைக்கிறார்கள்.

அடுத்த பகுதியில் அரசியல்....

1 comment:

Vasu said...

Deep analysis..Nice read..Keep going.