Monday 29 December 2008

koffee with anu - bombay jayashree and t.m.krishna

கடந்த சனிக்கிழமை இரவு "koffee with anu" நிகழ்ச்சியை பார்த்த போது எனக்கு தோன்றியது ஒன்று தான். தமிழ் மொழி, தமிழ் இசை இதையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் நாம் தமிழில் பேச வேண்டும். t.m.கிருஷ்ணா கூட பரவாயில்லை, கொஞ்சம் தமிழ் பேசினார் ஆனால் பாம்பே ஜெயஸ்ரீ அந்த நிகழ்ச்சி முழுதும் ஆங்கிலத்தில் தான் பேசினார். கர்நாடக இசையை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்த நிகழ்ச்சியை யாராவது ஒரு பாமரர் பார்த்திருந்தார் என்றால் நிச்சயமாக எதுவுமே புரிந்திருக்காது. நிகழ்ச்சியை நடத்தும் அனுஹாசன் என்ன தான் கேள்விகளை தமிழில் கேட்டாலும் பதில்கள் ஆங்கிலத்திலேயே வந்தன.

கணினி வந்த பின் கடுதாசி எழுதும் பழக்கம் அறவே போய்விட்டது. அதன் விளைவால் தமிழில் எழுதுவது என்பது அரிதாகிவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் என் பாட்டி மறைந்துவிட்டார். அவர் பெயரை(ராஜலக்ஷ்மி) இறந்தவர் பதிவு அட்டையில்(Death Certificate) எழுத நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்."ஜ" எழுதுவதற்குள் கை ஒடிந்து விடும் போல் இருந்தது. இத்தனைக்கும் கல்லூரி அளவில் நான் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றவன். ஆனால் தமிழ் எழுதி பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை. பாலகுமாரன் ஒரு முறை சொன்னார் "என் எழுத்துக்கள் நூறாண்டுகளுக்கு மேலாக இருக்கும் என்று". இதை பற்றி சுஜாதாவிடம் கேட்ட போது(தோரணத்து மாவிலைகள் கட்டுரை தொகுதியில் சுஜாதா அவர்களின் பேட்டியை படிக்கவும்) "தமிழே இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்குமா என்று தெரியவில்லை என்றார்". உண்மையாகி விடுமோ என்று அஞ்சுகிறேன்.

4 comments:

GD said...

Very true, Vasu.

I had met Anuradha Ramanan and written about that meeting in Tamil. Just today, I managed to install Tamil fonts. I will be posting it soon on my personal blog.

Idhu ellavatrirkum thamizh aarvam than karanam endru koorinal adhu migai aagadhu!

Gokul said...

Vaasu uncle,

நீங்க college complete பண்ணி 13 years ஆகுதா.. எனக்கு தெரியவே தெரியாது...

Bye
Gokul

Vasu. said...

GD,

நிச்சயமாக தமிழ் ஆர்வம் தான் இதை எல்லாம் செய்ய உந்துகிறது. தமிழில் தட்டச்சு செய்ய நீங்கள் கூகுளின் மொழிபெயர்ப்பு(indic transliteration) பகுதியை முயற்சி செய்யவும்

Thanks,
Vasu.

Vasu. said...

கோகுல்,

கல்லூரி படிப்பு முடித்து பத்து வருடம் ஆகிறது. ஆனால் முதல் ஆண்டில் மட்டுமே தமிழ் பாடத்திட்டத்தில் இருக்கும் என்பதால் பதிமூன்று ஆண்டுகள் என்றேன்.

நன்றி,
வாசு.