இந்தியாவில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்(Deemed Universities) விரைவில் மூடப்படும் என்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என்ற எண்ணமே(concept) கூட வருங்காலத்தில் ஒழிக்கப்படும் என்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் சென்ற வாரம் அறிவித்தார். இந்த 44 பல்கலைக்கழகங்களில் பதினாறு நம்மூரில்.
என்னைப் பொறுத்த வரை இதை வரவேற்க வேண்டும். ஏற்கனவே தாழ்ந்திருக்கும் இந்திய கல்வித் தரத்தை இவர்கள் மேலும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்கிறார்கள் என்பது என் எண்ணம். தகுதி இல்லாதவர்களுக்கு துணை வேந்தர் பதவி, ஐந்து லட்சம் கொடுத்தால் பொறியியல் டிகிரி, நடிகர்களுக்கு டாக்டர் பட்டம் என்று தான் இன்று பெரும்பாலான நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றை நிரந்தரமாக மூடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், அப்படி செய்யும் போது
அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
2 comments:
துபாய் பயணத்தை பயணத்தை வெற்றிகரமாக முடித்து தமிழ் நாட்டின் பெருமையை மத்திய கிழக்கு, எகிப்து, போன்ற நாடுகளுக்கு நிரூபித்து , நாடு திரும்பியுள்ள அண்ணன், தானை தலைவரின் போர்வாள், அஞ்சா நெஞ்சன், இந்திய தகவல் தொழில் நுட்ப கழகத்தின் தூண், தியாக செம்மல் வாசு அவர்களை வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் , மேலும் இந்த சந்தர்பத்திலே நான் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான் , மானமிகு அண்ணன் மடிப்பு (மடிப்பாக்கத்தின் சுருக்கம்) வாசு அவர்கள் தங்களின் துபாய் அனுபவத்தை ஒரு தொடராக , நமது வலை தளத்தில் எழுத வேண்டும் என சென்னை தெற்கு, தர்மபுரி மேற்கு மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்களின் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
என் இதயக்கனி தம்பி கோகுல்,
கடல் கடந்து மத்திய கிழக்கு நாடுகள் சென்ற போதிலும் என் இதயம் இருந்ததென்னவோ இந்தியாவில் தான். பெரியாரும் அண்ணாவும் என் கனவில் தினமும் வந்து "உன் சேவை இந்தியாவுக்கு தேவை" என்று நீண்ட உரைகள் உரைத்ததை நீ அறிவாய் என்று நான் அறிவேன். எப்பொழுதும் உன் முகத்தில் புன்னகை காணவே விரும்பி கடல் என பணிகள் இருந்த போதும் கொஞ்சம் நேரம் எடுத்து என் அனுபவங்களை எழுத துவங்கியுள்ளேன்.
Post a Comment