Wednesday, 3 February 2010

கஜா கா தோஸ்த் பேசறேன் - 3

தொழிலாளர்கள் பற்றி கூறினேன் அல்லவா? இங்குள்ள மற்ற தரப்பினரின் வாழ்க்கை முறை என்ன? அரசு அலுவலராய் இருந்தாலொழிய ஒரு நாளைக்கு பனிரெண்டு மணி நேர உழைப்பு துபாயில் சர்வ சாதாரணம். தினமும் பனிரெண்டு மணி நேரம் வீதம் ஆறு நாள் உழைக்கும் துபாய் மக்களின் வெள்ளிக்கிழமை பொழுதுபோக்கு, தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ "Malls" எனப்படும் "Pin to Pistol" விற்கப்படும் அங்காடிகளுக்கு சென்று "Window Shopping" செய்வது தான். இதுவும் ஒரு கட்டத்தில் அலுத்துவிடும். அதன் பிறகு வீட்டில் அமர்ந்து "டிவிடி" பார்க்க வேண்டியது தான்.

துபாய் மக்களுக்கே கூட தங்கள் அரசின் மீது ஒரு பெரிய குறை இருக்கும் என்றால் அது எதற்கெடுத்தாலும் ஏன் அமெரிக்காவை மாதிரியாக கொண்டு செயல்படுகிறோம் என்பதாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பெரிய கட்டிடமா, இதோ பார் அதை விட பெரிதாக ஒன்று என் ஊரில் என்று உலகத்தையே தன் பக்கம் திருப்பும் வெட்டி பந்தா துபாய் அரசாங்கத்திற்கு நிறையவே உண்டு. எடுக்கறது பிச்சை ஆனா சாப்டா தாஜ் ஹோட்டலில் தான் என்று நம்ம ஊரில் சிலர் இருப்பார்கள் அல்லவா?(கோகுல், உனக்கு இங்கே சாரு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)அந்த மாதிரி விபரீதமான போக்கு துபாய் அரசுக்கு.

விளைவு? வாங்கியிருக்கும் கடன் வளர்ந்து கொண்டே போகிறதே தவிர குறைந்த பாடில்லை. பக்கத்தில் இருக்கும் அபுதாபி தான் தற்போது கடன் கொடுத்து உதவி இருக்கிறது. ஆனால், துபாய் பிரதமர் சங்கத்தை எப்படியும் கடனில் இருந்து மீட்டு விடுவேன் என்கிறார். குதிரை பந்தய விற்பன்னர் அல்லவா அவர்? எப்படியும் ஜாக்பாட் அடித்தே தீருவது என்று மீண்டும் மீண்டும் கோதாவில் இறங்குகிறார்(கடன் வாங்குகிறார்).

நான் மேலே சொன்னது போல வானளாவிய கட்டிடங்கள் மட்டுமல்லாமல், துபாய் மெட்ரோ, ஒவ்வொரு தரிப்பு இடத்திலும்(bus stop) குளிர்சாதன வசதி, அமெரிக்க போலீஸ் மாதிரி அதி நவீன கார் என்று வெள்ளைகாரனா நம்மளா, ஒரு கை பாத்துடலாம் என்று கொலைவெறியோடு துபாய் முன்னேற்ற பாதையில் செல்கிறது. துபாய் போன்ற நல்ல போக்குவரத்து வசதி கொண்ட ஊருக்கு இந்த மெட்ரோ போன்ற விஷயங்கள் தேவையா என்று தெரியவில்லை. மேலும் தொண்ணூறு சதர்விகித துபாய் மக்கள் கார் வைத்துக்கொண்டு இருப்பவர்கள். "எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார்" என்பது போல் அதுவும் போட்டிக்கான ஒரு விஷயம் என்றே தோன்றுகிறது எனக்கு. ஆனால், நான் இந்த ஒன்றரை மாத துபாய் அனுபவத்தை வைத்துக்கொண்டு இதை பற்றி பேசக்கூடாது.அங்கேயே இருப்பவர்களுக்கு தான் அதன் உண்மையான அவசியம் தெரியும்.
(இன்னும் பேசுவேன்)

2 comments:

ramu said...

//எடுக்கறது பிச்சை ஆனா சாப்டா தாஜ் ஹோட்டலில் தான் என்று நம்ம ஊரில் சிலர் இருப்பார்கள் அல்லவா?(கோகுல், உனக்கு இங்கே சாரு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)//
Ultimate comment.
Typical Vasu style :)

Vasu. said...

Thanks Ram