உங்கள் ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு "தமிழ்" பெண்ணை திருமணம் செய்ததாலும் மற்றும் என் பணி காரணமாகவும், என் கிரகம் உங்க ஊருக்கு ஒரு வருஷத்துக்கு நாலு இல்ல அஞ்சு முறை வரேன். எந்த அடிப்படைல உங்க ஊரை "மெட்ரோ" கணக்குல கொண்டு வந்தாங்களோ தெரில ஆனா நிச்சயம் அது அந்த வகையறா கிடையாது. உங்க ஊருக்கு அஞ்சு வருஷமா வந்து போறவன் அப்படின்ற முறையில சில வேண்டுகோள் வெக்கிறேன். தயவு பண்ணி கொஞ்சம் மாற முயற்சி பண்ணுங்க.
1. மம்தா பானர்ஜிக்கு வெளிக்கு வரலேனா கூட சிகப்பு கொடி பிடிக்கறீங்க. இதுல என்ன பிரச்சனை அப்படின, நீங்க சிகப்பு கொடி பிடிச்சு ஊர்வலம் போற பக்கம் பஸ் விட மாட்டேன்கறான். காலைல ஒரு ஸ்டாப்ல எறங்கிட்டு அதுக்கு எதிர் ஸ்டாப்பிங் போய் சாயங்காலம் நின்னா பஸ் வர மாட்டேன்குது. கேட்டா ஊர்வலம் போற பக்கம் பஸ் வராதுங்கறான். எங்களை மாதிரி வெளியூர்காரன் எப்படி அங்க வாழறது?
2. கொல்கத்தா பெண்களே, இது உங்களுக்கு. நீங்க எங்கள அண்ணன் மாதிரி நெனைச்சு தான் பஸ்ல பக்கத்துல நெருக்கிகிட்டு உட்கார்றீங்க. ஆனா, எங்களுக்கு ஒரு தம்பி இருக்கான். அவன் ஒரு சமயம் போல இருக்க மாட்டான். கூட்டம் தள்ளினா எங்க மேல விழறது, உங்க சொத்துக்களை எங்க மேல வெச்சு தேய்க்கறது எல்லாம் தாங்க முடில. நாங்கெல்லாம் தமிழன். அக்கா, தங்கச்சி, அம்மா தவிர எல்லாமே எங்களுக்கு பிகர் தான். உங்க அளவுக்கு சகோதரத்துவம் எல்லாம் எங்களுக்கு கிடையாது.
3. கொல்கத்தா ஆண்கள் கவனிக்க. பஸ் சீட்ல கொஞ்சம் அடக்கமா ஒக்காருங்க. கவட்டைய நல்ல விரிச்சிக்கிட்டு பக்கத்துக்கு சீட்ல முக்கால் பகுதியை எடுத்துகாதீங்க. நாங்களும் மனுஷங்க தான். அப்பறம், கைல பொட்டி, பை இதெல்லாம் வெச்சி இருந்தா
எறங்கற எடம் வரைக்கும் அத நீங்களே வெச்சுக்குங்க. யவன் ஒக்காந்து இருக்கானோ அவன் மடில அஞ்சு கிலோவை எறக்கி வெக்காதீங்க.
4. எச்சை துப்பும் போது சுத்திப் பாருங்க. யாரும் வரலேனா துப்புங்க. மேல துப்பிட்டு கூச்சமே இல்லாம, "ஏன்டா நான் துப்பும் போது வந்தேன்னு கேக்கறீங்க?". என்ன நியாயம் இது?
5. நாடு ரொம்ப முன்னேறியாச்சு. ரயில் பயணத்துக்கு முன்பதிவு எல்லாம் கம்ப்யூட்டர் உபயோகிச்சே செய்யலாம். அதை எல்லாம் தெரிஞ்சுக்குங்க. இன்னும் ஐம்பது வருஷம் பின் தங்கியே இருக்கீங்க. அதே மாதிரி, காளி மாதாக்கு பான் பராக் போட்ட வாயோடையே பூஜை எல்லாம் செய்யாதீங்க. உங்களுக்கு அது பிரச்சனை இல்ல. என்ன மாதிரி வெளியூர்காரனுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
6. கொல்கத்தா கணினி பொறியாளர்களே, நீங்களும் ஆபீசுக்கு பான் பராக், ஜர்தா எல்லாம் போட்டுட்டு வராதீங்க. எனக்கு புரியுது, அது உங்க குல வழக்கம். இருந்தாலும் பக்கத்துல இருக்கறவனுக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கும் அப்படின்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அத மாதிரி கண்ட இடத்துல சிகரட் பிடிக்காதீங்க. பொது இடங்களில் புகை பிடிக்க தடை இருக்கு. ஆனா, உங்க ஊர்ல அதெல்லாம் விஷயமே இல்ல. அந்த சட்டத்தை அன்புமணி ராமதாஸ் கொண்டு வந்தப்போ அப்படி தான் பிடிப்போம்னு சொன்னவரு உங்க முதலமைச்சர். "யதோ ராஜா, ததோ பிரஜா".
7. எந்த கேள்விக்கும் சுருக்கமா பதில் சொல்ல முயற்சி செய்யுங்க. ஒரு எடத்துக்கு எப்படி போகணும் அப்படின்னு என்ன மாதிரி ஒரு வெளியூர்க்காரன் கேட்டா, அவனுக்கு அந்த எடத்தோட வரலாறு, பூகோளம் எல்லாம் சொல்லாதீங்க. நாங்களே நெறைய பேசறவங்க. ஆனா உங்க கூட பேசும் போது எங்களுக்கு கண்ணை கட்டுது.
8. எடுத்த உடனே சண்டைக்கு வராம, உங்க பக்கம் தப்பு இருக்கான்னு ஒரு வாட்டி நிதானமா யோசிங்க. முக்கியமா சண்டை போடும் போது ரோட்ல ஓரம் கட்டி சண்டை போடுங்க. உங்க சண்டைய பாக்க பஸ் டிரைவர், பஸ்ல இருக்கறவன் எல்லாம் போறானுங்க. நாங்க எல்லாம் எப்போ வீடு போய் சேரர்து?
9. குப்பைய எல்லாம் ஊருக்கு ஒதுக்கு புறமா எங்கயாவது போட சொல்லுங்க உங்க மாநகராட்சிய. இப்போ எங்கள பாருங்க. பள்ளிக்கரனை அப்படிங்கற எடத்தை குப்பை போடற எடமாவே மாத்திட்டோம். அந்த மாதிரி எதாவது செய்யுங்க. நடு ரோட்ல குப்பைய போட்டா நல்லாவா இருக்கு?
10. கடைசியா, கம்யூனிஸ்ட் கட்சிக்கு தான் ஒட்டு போடறதுன்னு முடிவு பண்ணிடீங்க. அதுல கொஞ்சம் படிச்சவனா, பண்புள்ளவனா பார்த்து ஓட்டுப் போடுங்க. உங்க ஊரு முன்னேற நீங்க பார்த்து எதாவது செஞ்ச தான் உண்டு.
5 comments:
:-)
ஆஹா... அண்ணே... கல்கத்தா மாப்பிள்ளையா ஆகிட்டு இப்படி எல்லாம் எதிர் பார்த்தா எப்பூடி?
Vasu,
Guess you have a very bad experience everytime you go there.
உங்க கதறல் இந்த ப்ளாக் போஸ்ட்லயே தெரி(க்கு)யுது.
இவங்க எப்பவுமே இப்டிதான்!!!
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
இந்த குளம்பியகம் வலைப்பதிவு தமிழகத்தில் பலராலும் படிக்கபடுவது (சகோதர சகோதரிகள் என்று இனியும் சொல்ல முடியாது ) தங்கள் அறிந்ததே , அப்படி இருக்கும்போது இந்த அக்கா தம்பி விவகாரத்தை எழுதுவது , பெண் வாசகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு பெறாது என்பது என் எண்ணம்.
மேலும், அம்மா, அக்கா, தங்கை தவிர மற்றதெல்லாம் பிகர் என்ற உண்மையை இப்படி பொதுவில் தெரிவிப்பது நல்லதல்ல, அது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாக இருக்க வேண்டும் என்பது தமிழக ஆண்களின் வேண்டுகோள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
@மோகன்,
அந்த புன்னைகையின் அர்த்தம் என்ன?
@இராகவன்,
சார், மனசாட்சிய தொட்டு சொல்லுங்க, இதெல்லாம் எதிர்பார்ப்பா? :-)
@ராம்,
முடியல ராம் என்னால. நம்மூர் சத்தியமா சொர்க்கம்
@கோகுல்,
நீங்க இந்த மனையோட இணை ஆசிரியர். அது நினைவில் இருக்கட்டும். நான் அதை எழுதும் போதே யோசிச்சேன். பெண்கள் கொஞ்சம் முகம் சுளிப்பாங்க. உண்மை தான்.
பெண்கள் மன்னிக்கவும். வருங்காலத்துல இப்படி நடக்காம பாத்துக்கறேன். உங்க ஆதரவை தொடர்ந்து கொடுங்க.
Post a Comment