Wednesday 26 January 2011

சவால்-குடியரசு என்றால் என்ன?

எனக்கு மிகப்பல நாட்களுக்கு பின்தான் குடியரசு என்பதற்கான அர்த்தம் தெரிந்தது. இப்போது இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்கள், சுதந்திர தினம் என்றால் தெரியும், ஆனால் குடியரசு தினம் எதற்காக கொண்டாடுகிறோம்? 26-1-1950 அன்று என்ன நடந்தது? நம் நாட்டை குடியரசு (republic) என்று ஏன் கூறுகிறோம்?

இதை படிக்கும் நீங்கள் விக்கிபீடியாவை / கூகிளாண்டவரை  துணைக்கு அழைக்காமல் , மனசாட்சியுடன் 2/3 வரிகளில் பதில் கூறுங்கள் (பின்னூட்டம் வழியாக). 

5 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

மக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....
மக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு

Gokul said...

ரஹீம்,
நச் பதில்!

Unknown said...

என்ன நக்கலா? எவ்வளவு அப்பாவியாக அவர் குடியரசுக்கு விளக்கம் கேட்கிறார். எல்லோரும் விளையாட்டுபிள்ளை போல பதிலளிக்கிறீர்களே. கொஞ்சம் ஸீரியஸாக யோசனை செய்து பதில் சொல்லுங்கள்.
அது மகன் களுக்கு மட்டுமல்ல ஆகையால் வாரிசுகளுக்கு என்று மாற்றி படிக்கவும். அப்பறம் கனிமொழி கோபித்துகொள்வார்.

sury siva said...

குடியரசு என்றால் என்ன என்று இப்பொழுது தான் எனக்கு
புரிந்தது. நன்றி.
நான் இது நாள் வரை தப்பாக ( ??? !!! ) புரிந்துகொண்டிருந்தேன்.
குடிமகனைக் குடிக்கவைத்து அவனை
குடிகாரனாக மாத்தி அவன்
குடும்பத்தையே ஒரு தினுசா
குளோஸ் பண்ணினது என்று நினைச்சுகிட்டு
இருந்தேன்.

நீங்க சொன்னப்பறம் தான் தெரிஞ்சது.

சுப்பு

Gokul said...

கிணற்று தவளை , ரஹீம், சூரி
எல்லோரும் தானை தலைவனையே டார்கெட் பண்றீங்களே...
தினுசு தினுச யோசிக்கராங்கப்பூ ..

ஒருவேளை தமிழ்நாட்டுல கேட்டது தப்போ..... பார்ப்போம்