கலைஞர் தொலைகாட்சியில் "நான் கடவுள்" பார்த்துக்கொண்டே விளம்பர இடைவேளையில் பொதிகை அலைவரிசை வந்த போது வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் கிரேசி மோகனின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். ஒரு மணி நேர நிகழ்ச்சியின் கடைசி இருபது நிமிடங்களை தான் பார்த்தேன். வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஞானம் நாம் அறிந்தது தான் என்றாலும் பாமரர்களுக்கும் புரியும்படி அவர் கூறிய உலக அழிவை பற்றிய விளக்கம், பூர்வ ஜென்ம வினைகள் போன்றவை அற்புதம். கீழே உள்ள சுட்டியில் அந்த நிகழ்ச்சியை காணலாம்.
http://www.youtube.com/watch?v=fcIV2IegHtY&feature=mfu_in_order&list=உல்
மறுநாள் பொங்கலன்று ஜெயா டிவியில் "கமல் ஹாசியம்" நிகழ்ச்சியிலும் கிரேசி தான். கமலும் கிரேசி மோகனும் சிறப்பு விருந்தினர்களுடன் நகைச்சுவை பற்றி பேசினார்கள். சிறப்பு விருந்தினர்களாக சோ, மௌலி, "சித்ராலயா" கோபு, பாலச்சந்தர் ஆகியோர். மௌலி பேசியவை தான் நிகழ்ச்சியின் highlight. தன் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்த ஒரு காலகட்டத்தில் அருகில் உள்ள வீடுகளுக்கு மரண செய்தி தெரிவிக்க சிறுவனாக தான் சென்ற அனுபவங்களை அவர் விவரித்த விதம் கேட்டு வயிறு புண்ணாகி விட்டது.
சில நாட்களுக்கு முன் ரா. கி. ரங்கராஜன் அவர்களின் "ஹாஸ்யக் கதைகள்" புத்தகத்திற்கு கிரேசி மோகன் எழுதிய முன்னுரை படித்தேன். அதிலிருந்து சில பகுதிகள்.
எழுத்தாளர்களில் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள் ஒரு 'ஆயிரங்காலத்துப் பயிர்..' நானோ நேற்று முளைத்த ஹாஸ்யகாரன். தன்னுடைய 'ஹாஸ்யக் கதைகளுக்கு' என்னை அவர் முன்னுரை எழுதச் சொன்னபோது, அதுவே எனக்கு ஒரு மிகப் பெரிய ஹாஸ்யமாகப் பட்டது. அதனால் என்ன இப்போ? சரித்திரக் கதைகளில் மன்னர் வருவதற்கு முன், கட்டியக்காரன் வருவதில்லையா..? அவனிடம் என்ன பாண்டித்தியமா எதிர்ப்பார்க்கிறோம்? 'பராக் பராக்' சொல்லத் தெரிந்தால் போதாதா, என்று என்னை நானே சுதாரித்துக் கொண்டேன்.
ஹாஸ்யம் ஜோஸ்யம் இரண்டுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை உண்டு..இரண்டும் எப்போது பலிக்கும் அல்லது லபிக்கும் என்று சொல்ல முடியாது..ஹாஸ்ய புத்தகத்தை படிப்பது முதலிரவை போல.. "சொல்லித் தெரிவதில்லை சிரிப்புக் கலை..."
3 comments:
நிகழ்ச்சியில் கமல் கொஞ்சம் வயதானவர் போலத்தெரிந்தார் கவனித்தீர்களா?
Crazy mohan / Velukkudi .. great combination.
Thanks for the link!
-Gokul
Yeskha,
வயதானது மட்டும் இல்லை. நல்ல தொப்பையும் கூட இருந்தது.
Post a Comment