மணிரத்னம் இயக்கம் அடுத்த படம் "பொன்னியன் செல்வன்" நாவலின் கதையாம். இது சரித்திர கதையா இல்லை பொன்னியின் செல்வனை தழுவி ஒரு சமுதாய கதையா (ராமாயணத்தை தழுவி ராவணன் எடுக்கவில்லையா அப்படி..) அப்படின்னு தெரியலை.. பார்ப்போம்.
இதில் இதயத்தை உறைய வைக்கும் செய்தி "வந்தியத்தேவனாக" நடிப்பது இளைய தளபதி. விக்ரமும் நடிக்கிறார் (அநேகமாக அருண்மொழி, அதாவது ராஜா ராஜா சோழனாக இருக்கும்)
மற்றபடி ஒரு சூப்பர் டூப்பர் தோல்வி இருக்கிறது(சரித்திர கதையாக இருக்கும் பட்சத்தில்) , காரணம் ,
௦. இந்த காலத்தில் சரித்திர கதையை மக்கள் ஒத்துகொள்வது ரொம்ப கஷ்டம்.
1. பெரும்பாலான மக்களுக்கு பொன்னியின் செல்வன் கதை தெரியாது. ராமாயணம் , மகாபாரதம் போன்ற வெற்றி பெற்ற தொடர்களுக்கு பின்பு தூர்தர்ஷனில் "சந்திரகாந்தா" என்ற தொடர் வந்தது, தொடர் சூப்பர் ப்ளாப்! ஆக கதை தெரியாமல் புராண / வரலாற்று கதைகளை யாரும் பார்க்க மாட்டார்கள்.
2. உண்மையிலேயே சரித்திர படம் அப்படின்னா, தெலுகு version இல்லாம பண்ண முடியாது (பட்ஜெட் சாமி...), தமிழ்நாட்டிலேயே தெரியாத பொன்னியின் செல்வன்ஆந்திராவில் எப்படி? ஏற்கனவே தமிழ்நாட்டு அரசியல் கதையான "இருவர்" ஆந்திராவில் வெற்றிகரமாக 2 நாட்கள் ஓடியது. prince மகேஷ்பாபு இதில் நடிக்கிறாராம் , தமிழிலுமா அல்லது தெலுகில் மட்டுமா ..தெரியலை.
4 . படத்திற்கு இசை "இளையராஜா ". BGM இசை அமோகமாக இருந்து , பாடல்கள் இளையராஜாவின் தற்போதைய வழக்கப்படி சுமாராக இருக்க போகிறது.
5 . வசனம் திரு.ஜெயமோகன் .
6. ஒரே ஆறுதல் தயாரிப்பது சன் டிவி.
இவ்வளவு எழுதினாலும், ஒரு பொன்னியின் செல்வன் ரசிகனாக எனக்கு தோன்றியவை
-பெரிய பழுவேட்டரையராக - வினு சக்கரவர்த்தி
-சிறிய பழுவேட்டரையராக - நாசர்
-ஏதாவது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் - பிரகாஷ்ராஜ்,கோட்ட ஸ்ரீனிவாச ராவ்
ஹ்ம்ம்.. ஆசை யாரை விட்டது...
8 comments:
Anne.. Nandhini yaarune?? Kundhavai paathiram endha amnani nadipanga?
என்னால 3 Idiots ரீமேக்ல அமீர் கான் ரோலை விஜய் பண்றதையே தாங்க முடில. இதுல வந்தியத்தேவனா? அது சரி, வந்தியத்தேவன் பஞ்ச் டயலாக் பேசி எப்போ தமிழ் மக்கள் பாக்கறது?
Sen நண்பா,
என்ன ஒரு கொலைவெறி? தமிழ் தெரியாத நடிகை தான் குந்தவை, நந்தினி பாத்திரங்களுக்கு சரியா வரும். அப்போ தான் சுகாசினி, அனு ஹாசன் டப்பிங் பண்ண வசதியா இருக்கும். குந்தவையாக அனுஷ்கா, தமன்னா தான் நந்தினி.
//இந்த காலத்தில் சரித்திர கதையை மக்கள் ஒத்துகொள்வது ரொம்ப கஷ்டம்.///
yaarunga sonnaa appadi?
hope it comes out as a sarithirak kadhai.
Let's wait n wtch.. i think the movie would be a success if it's taken in a contemporary way...:)
Surveysen,
//yaarunga sonnaa appadi?
hope it comes out as a sarithirak kadhai.//
Tell me if any tamil films based on historical stories (not period films based on pre-independence phase) has come and succeeded in last 20 years! :-)
// i think the movie would be a success if it's taken in a contemporary way...:)//
DT,
I agree, but taking this story in contemporary way also is a huge challenge..
Sen,
Well, bloggers can prepare a list of who's who on ponniyin selvan characters with real time stars.
வல்லவரையன் வந்தியத்தேவன் - ஆர்யா
ராஜராஜர் - சூர்யா
வானதி - ஸ்ருதி
குந்தவை - வித்யா பாலன்
பூங்குழலி - ப்ரியாமணி
ஆழ்வார்க்கடியான் - நாசர்
பழுவேட்டரையர்கள் - விஜயகுமார், நெப்போலியன்
ஆதித்த கரிகாலன் - கிஷோர்
நந்தினி - ரீமா சென்
Post a Comment