Friday 25 February 2011

துக்ளக் கேள்வி-பதில்

2-3-2011 துக்ளக் இதழில் இடம் பெற்றுள்ள சில சுவையான கேள்விகளும் அதற்கான சோவின் பதிலும்:

'இந்தியர்கள் ஆளத் தெரியாதவர்கள்' - என்று சர்ச்சில் கூறியது உண்மைதானே?
பதில்: சர்ச்சில் 'இந்தியர்கள் ஆளத் தெரியாதவர்கள்' என்று கூறவில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கிற மசோதா, ஜூன் 1947-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வந்தபோது சர்ச்சில் பேசியது இது:

'... power will go to the hands of rascals, rogues, freebooters; all Indian leaders will be of low calibre and men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight among themselves for power and India will be lost in political squabbles. A day would come when even air and water... would be taxed in India....'

இப்படி சர்ச்சில் பேசியபோது, இருந்த இந்தியத் தலைவர்களின் மேன்மையும் - உயர்வும் சர்ச்சில் மீது இந்தியர்களுக்கு கோபம் வர காரணமாயின. ஆனால், இன்றைய இந்திய அரசியல்வாதிகளும், தலைவர்களும் சர்ச்சிலின் வார்த்தைகளை நிரூபித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற புதிய பொறுப்பை பத்திரிகைகள் தங்களுக்கு வழங்கி மகிழ்ந்திருப்பது பற்றி?

பதில்: தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராகிய ராசாவுக்கு இணையாக அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் இல்லை, வரவும் முடியாது என்று சுட்டிக்காட்டி பத்திரிகைகள் என்னை கிண்டல் செய்கின்றன.

தி.மு.க. வினர் உங்கள் கொடும்பாவியை(உருவ பொம்மையை) எரித்திருக்கிறார்களே?

பதில்: என்னுடைய நாடகத்தில் பல ரகளைகள் செய்து, என் நாடகங்களை பாப்புலர் ஆக்கியது; 'துக்ளக்' பத்திரிக்கையை பறிமுதல் செய்து, பத்திரிக்கையைப் பிரபலமாக்கியது எல்லாமே தி.மு.க.வினர் தான். அப்படி செய்து கொடுத்த பாப்புலாரிட்டி போதாதென்று, இப்போது கொடும்பாவி எரித்து விளம்பரம் தேடித் தருகிறார்கள். நான் முன்பே சொல்லியிருக்கிறேன் - கலைஞர் என்னுடைய விளம்பர ஏஜன்ட். அவர் இன்னமும் அந்தப் பதவியை ராஜினாமா செய்யவில்லை. நன்றி.


குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறிய ராஜஸ்தான் அமைச்சர், தன பதவியை ராஜினாமா செய்துள்ளாரே?

பதில்: பிரதிபா பாட்டீல், ஜனாதிபதி ஆனதிலிருந்து இன்று வரை, 'அவர் ஏன் ஜனாதிபதியானார்? அப்படி என்ன தகுதி அவரிடமிருந்தது?' என்ற கேள்விகளுக்கு யாருக்குமே விடை தெரியவில்லை. இப்போது அமைச்சர், 'பிரதிபா பாட்டீல் இந்திரா காந்தி வீட்டில் சமையல் செய்தார்;பாத்திரம் கழுவினார்;அந்த விசுவாசத்திற்கு ஜனாதிபதி பதவி இப்போது கிடைத்துள்ளது' என்று கூறி விளக்கம் அளித்து விட்டார். அரசாங்க ரகசியத்தை வெளியே சொன்னது தவறு அல்லவே? அதனால் வெளியேறி விட்டார்.

2 comments:

abbeys said...

2-3-2011? துக்ளக் இதழில் SARI PARKAVUM

Vasu. said...

ஆமாம். 2-3-2011 இதழ் தான். ஏன் இந்த சந்தேகம்? துக்ளக் வழக்கமாய் அடுத்த இதழ் வெளிவரும் நாளின் முதல் நாளை அட்டைப்படத்தில் கொண்டிருக்கும்.