Monday 5 January 2009

கமல்ஹாசன்-நிகழ மறுத்த அற்புதம்-ஓர் எதிர்வினை(2)

சாரு கமலை பற்றி கூறும் அடுத்த குறையை பார்ப்போம்.

கமல்ஹாசன் தனது முன்னோடியான சிவாஜி கணேசனின் பாதையையே பின்பற்றுவதுதான் அவரது முயற்சிகள் தோல்வியடைவதற்கான காரணம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் கணேசனுக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம், கமலுக்கு உலக சினிமா தெரியும் என்பதுதான். இருந்தாலும், இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. காரணம், கமல் தனது உலக சினிமா அறிவைத் தமிழ் சினிமாவை செழுமைப் படுத்துவதற்குப் பயன்படுத்தவில்லை. மாறாக, நகலெடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினார். உதாரணம், நாயகன் (1987) படத்தில் கமல் தலையைக் கோதும் ஸ்டைல் கூட காட்ஃபாதரில் (1972) மார்லன் ப்ராண்டோ தனது தலையைக் கோதும் மேனரிஸத்திலிருந்து அப்பட்டமாக நகல் எடுத்துக் கொண்டதுதான். நாயகனோடு முடியவில்லை இந்த நகல் சமாச்சாரம்; தேவர் மகனிலும் (1992) அது தொடர்ந்தது.

கமலின் அவ்வை சண்முகி (1996) ராபின் வில்லியம்ஸ் நடித்த Mrs. Doubtfire என்ற படத்தின் அப்பட்டமான தழுவல். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

கமலின் உலக சினிமா அறிவு இப்படி நகலெடுக்க மட்டும்தான் பயன்படுகிறது என்றால், தான் வாழும் சமூக, அரசியல், கலாச்சார சூழலை அவர் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறார்; எவ்வாறு தனது படங்களில் கையாளுகிறார் என்று பார்த்தால் அதிலும் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. குருதிப் புனலில் (1996) வரும் நகஸல் போராளி ஒரு சிறுமியைப் பாலியல் நோக்கத்துடன் பார்க்கிறான். அவனுடைய மனைவி ஒரு விபச்சாரியைப் போல் சித்தரிக்கப் படுகிறாள்.

வன்முறையைத் தங்கள் வழியாகக் கொண்டு போராடும் தீவிரவாதிகளோடு ஒருவருக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் அந்தத் தீவிரவாதிக்கும் ஒரு ஜேப்படித் திருடனுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? மனித வெடிகுண்டாக மாறி மக்களைக் கொல்லும் ஒரு தீவிரவாதி நிச்சயமாக ஒரு சமூக விரோதிதான். ஆனால் அவன் தான் நம்பும் ஒரு கொள்கைக்காகத்தானே தன்னையே சாகடித்துக் கொள்ளத் தயாராகிறான்? அப்படியானால் அவன் ஒரு ஐடியலிஸ்ட்தானே? இந்தப் புரிதல் இல்லாமல் ஒரு சராசரி மனிதனின் பார்வையோடு அணுகியதால்தான் குருதிப் புனலில் வரும் போராளி கேவலமான முறையில் சித்திரிக்கப் பட்டிருகிறான்.

சராசரி மனிதனின் பார்வை என்றால் என்ன என்ற சந்தேகம் எழலாம். இதோ உதாரணம்: வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியா சிறப்பாக இருந்தது; ராஜாங்கம் நன்றாக நடந்தது. இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும். (பாகிஸ்தானில் ஏதோ ரொம்ப அற்புதமான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பது போல் இவர்களுக்கு நினைப்பு!)

இப்படிப்பட்ட சராசரி மனிதனின் அணுகுமுறைதான் கமலின் பல்வேறு படங்களில் வெளிப்படுகிறது. தசாவதாரத்தில் வரும் முஸ்லீம் பாத்திரம் மற்றொரு உதாரணம்.


கமல் பிராண்டோவை நகல் எடுப்பதாக கூறுகிறார் சாரு. நாயகனுக்கு முன் பல படங்களில் நடித்தார் கமல். அவற்றை பற்றி அவர் பேசவில்லை. உதாரணமாக, வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் கமலின் நடிப்பு யாரை சார்ந்து இருந்தது? சலங்கை ஒலி, மூன்றாம்பிறை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் இவை எல்லாம் நாயகனுக்கு முன் வந்தவை. இந்த படங்களில் கமலின் நடிப்பு பிராண்டோவை பார்த்து வந்ததா? மர்லன் பிராண்டோ இறந்த பொது கமல் rediff வலைத்தளத்திற்கு பேட்டி அளித்தார். அதில் "I am the son of Brando" என்றார். வெளிப்படையாக இப்படி சொல்லும் ஒருவர் பிராண்டோவை ஓரிரு காட்சிகளில் நகல் எடுப்பதில் என்ன தவறு?

Mrs.Doubtfire படத்தின் கருவும் அவ்வை ஷண்முகியின் கருவும் ஒன்று. Avvai Shanmugi is not a plagiarized version of Mrs.Doubtfire. அப்படி பார்த்தால் ஷோலே படம் அகிரா குரோசவாவின் seven samurai திரைப்பட தழுவல். சென்ற வருடம் தனுஷ் நடித்து வெளியான பொல்லாதவன் திரைப்படம் இத்தாலிய படமான The Bicycle Thief படத்தின் தழுவல்.

குருதிப்புனல் Drohkaal என்ற இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக். அது தமிழில் டப் செய்ய பட்டது. சராசரி தமிழன் நக்சல் போராளியை பற்றி இப்படி எல்லாம் சிந்திப்பான் என்று கமல் நினைக்கவில்லை.மேலும்,சாருவுக்கு நக்சல் போராளியை இப்படி காட்டினால் பிடிக்காது என்பதும் கமலுக்கு தெரியவில்லை. ஐயோ பாவம், கமலுக்கு உலக சினிமா ஞானமும் சாரு அளவுக்கு இல்லை, தமிழ் சினிமா பற்றியும் சாரு அளவுக்கு தெரியவில்லை.ஒன்று செய்யலாம். மர்மயோகி வெளியாகும் போது சாருவுக்கு பிடித்த மாதிரி ஒன்றும் தமிழர்களுக்கு பிடித்த மாதிரி ஒன்றுமாக கமலை இரண்டு மர்மயோகிகள் செய்து கொடுக்க சொல்லலாம். அல்லது, கமல் சாரு அளவுக்கு வெட்டியாக இருக்கும் போது சாருவுக்கு ஒரு போன் செய்து மர்மயோகி படத்தின் கதாபாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை கேட்கலாம். எப்படியோ, தமிழ் சினிமா உலக அரங்கில் பேசப்பட வேண்டும். அதை நிஜமாக்க தமிழ் எழுத்தாளர் சாருவால் தான் முடியும்.
(தொடரும்)

2 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

சாருவுக்கு வேண்டியது தான்!
கமலைப் பற்றி நிகழ மறுத்த அற்புதம் என்று, வர்ணித்து விமரிசனம் செய்ததற்கு சாரு இப்படியெல்லாம் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியது தான்.

"கமலை உலகநாயகன் என்று அழைக்க சொல்லி அவர் கேட்கவில்லை. மேலும், உலகநாயகன் என்று அழைக்க நடிப்பை மட்டுமே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை."
ஜனங்கள் அப்படிக் கூப்பிடுகிறார்களோ இல்லையோ, தனக்குத் தானே ஆழ்வார்பேட்டை ஆண்டவன், உலக நாயகன் இப்படி எல்லாம் பாட்டு சீன் வைத்து ஜிகினா ரீல் சுற்றும் கமலை வைத்து காமடி கீமடி ஒண்ணும் பண்ணலையே, வாசு சார்?

கமல் ஒரு நல்ல கலைஞன் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், கூத்தாடிகளை நடுவீட்டுக்குள் கொண்டு வைத்துக் கொண்டாடியதின் விளைவை தமிழ்நாடு அறுபது வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது,எதையோ கொண்டு வந்து நாடு வீட்டில் சீராட்டினால் என்ன ஆகும் என்று சொல்லும் முதுமொழி நினைவிற்கு வந்து தொலைக்கிறதே! அது எங்கே போய் என்ன செய்கிறது என்பதை விட, அதை பார்த்து அதை சீராட்டுகிற ஜனங்களும் ........
எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

Vasu. said...

கிருஷ்ணமூர்த்தி சார்,

சினிமா என்ற மாயையில் தமிழ்நாடே மூழ்கி உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது கேள்வி அதில் கமலை மட்டும் ஏன் டார்கெட் செய்ய வேண்டும் என்பது தான்? எத்தனை படங்களில் கமல் தன் சொந்த பெருமையை பீத்தி கொண்டுள்ளார்? எனக்காக கமல் தன் பெருமையை பறைசாற்றும் படி எழுதிய பத்து பாடல்களை கூறுங்களேன். படத்துக்கு படம் பஞ்ச் டயலாக், தன்னை போற்றும் பாடல்கள் என்று வாழ்ந்து வரும் ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், சிம்பு இவர்களை எல்லாம் மொத்தமாய் ஓரங்கட்டி விட்டு இரண்டு படத்தில் தனக்காக பாடினால் அவரை நடு வீட்டில் வைக்கிறோம் என்கிறீர்கள். இத்தனைக்கும் அந்த பாடல் வரிகள் அவர் செய்த சாதனைகள் மற்றும் அவர் இளமையை குறித்து எழுதப்பட்டவை. நான் கமலை நேசிப்பது அவரது உழைப்புக்காக. அந்த உழைப்பை சாரு இலக்கியத்தில் போடட்டுமே.

"நாங்கள் உங்கள் சாயங்காலங்களை சந்தோஷப்பட வைக்க மட்டும் தான் இருக்கிறோம். அதற்கு மேல் எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. எங்களை இப்படி அதிசயமாக பார்க்காதீர்கள்" என்று மலேசியா வானொலி ஆஸ்ட்ரோ வானவில்லுக்கு பேட்டி கொடுத்ததும் இதே கமல் தான். அது ஏன் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை?

மேலும், உலகத்தரம் வாய்ந்த சினிமா என்று சாரு வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறார். உலகத்தரம் என்பது என்ன? சாருவை கேட்டால் ஒரு பிரெஞ்சு படத்தில் பெண்ணின் யோனியில் ஒருவன் புனலை கொண்டு ஒன்றுக்கு போவான். அந்த உலகத்தரம் தமிழ் திரைபடங்களில் இல்லை என்பார். நமக்கு என்று ஒரு set of constraints உள்ளது. அதற்குள் தான் படம் செய்ய முடியும். நமீதா பற்றி உலகத்தரம் வாய்ந்த பதிவு ஒன்றை சாரு தன் வலைத்தளத்தில் போட்டு விட்டு அடுத்த இரண்டு மணி நேரத்தில் நீக்கினார். ஏன் என்று கேளுங்களேன்?