தமிழ் திரையுலகில் கமலை போல் பாவப்பட்ட நடிகர் யாருமே கிடையாது. படிக்காத பாமரன் முதல் அறிவுஜீவிகள் வரை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யும் நடிகர் அவர் ஒருவர் தான். பாருங்களேன், இரண்டு நாட்களுக்கு முன் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர்(இவரை தமிழ்நாட்டில் ஒரு 50 பேருக்கு தெரிந்து இருக்கலாம்) தனது வலைமனையில் கமலை பற்றி விமர்சித்திருக்கிறார். கமல்ஹாசனை எப்படி விமர்சிக்கலாம் என்பது என் பிரச்சனை இல்லை. யார் விமர்சிப்பது என்பது தான் பிரச்சனை.
வடிவேலு ஒரு படத்தில் எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக இருப்பது போல் நடிப்பார். இருக்கிற இடத்தை விட்டு நகர கூட மாட்டார். அந்த அளவுக்கு மோசம் இல்லை ஆனால் இந்த சாரு என்ற எழுத்தாளர் நிஜ வாழ்கையில் வடிவேலு படத்தில் நடித்ததை போன்ற ஒரு பாத்திரம். ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு. சாரு தான் காலை முதல் மாலை வரை செய்ததை "குட்டிகதைகள்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிடுவார். அப்படி வெளியிடுவதால், அவர் நண்பர்கள் அவரை தமிழ்நாட்டின் தலை சிறந்த எழுத்தாளர் என்பார்கள். இப்படி இருபத்திநான்கு மணி நேரமும் உழைக்கும் நமது உலக மகா எழுத்தாளர் கமலை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
"தமிழ்நாட்டில் உருவாகும் எந்த ஒரு பிரபலமான நபரும் இந்த இமேஜ் என்ற பொறியில் சிக்கிக் கொள்ளாமல் இருந்ததில்லை. சினிமாவை எடுத்துக் கொண்டால், சிவாஜி. (எம்ஜியார் அரசியலுக்குள் போய் விட்டதால் அவரை விட்டு விடுவோம்). சிவாஜியைத் தமிழ்நாடே நடிகர் திலகம் என்று கொண்டாடியது. ஆனால் அவருடைய பெயர் தமிழ்நாட்டு எல்லையை விட்டு வெளியே தெரியவில்லை. உண்மையிலேயே உலகின் தலைசிறந்த எந்த நடிகனோடும் ஒப்பிடும் அளவுக்கு நடிப்புத் திறமை கொண்ட கணேசன் தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே தரத்தில் மிகத் தாழ்ந்த வர்த்தக சினிமாவிலேயே தொடர்ந்து நடித்ததன் காரணமாக இன்று சாதாரண ஆட்களால் கூடப் பகடி செய்யப் படும் அளவுக்கு கேலிப் பொருள் ஆகி விட்டார். தனது கடைசிக் காலத்தில் அவர் நடித்த ’ முதல் மரியாதை ’ என்ற படம் மட்டுமே அவருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது என்றால் அது அவரது நீண்ட கால சினிமா அனுபவத்துக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்!
காரணம், உலகின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராக விளங்கினாலும் சிவாஜிக்கு உலகின் தரமான சினிமா பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருக்காதது மட்டும் அல்ல; சினிமா மேதைகளுள் ஒருவராக உலகமே கொண்டாடும் சத்யஜித் ரேயை சிவாஜியும், எம்ஜியாரும், ராஜ் கபூரும் கிண்டலும் கேலியும் செய்தார்கள் என்பது வரலாறு.
சிவாஜியை அடிக்கடி பலரும் மார்லன் ப்ராண்டாவோடு ஒப்பிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மார்லன் ப்ராண்டோ A Street Car Named Desire (1951), Julies Ceasar (1953), On The Waterfront (1954) போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களைத் தந்து கொண்டிருந்த போது சிவாஜி எதிர் பாராதது, கூண்டுக் கிளி, தூக்குத் தூக்கி, மனோகரா போன்ற வர்த்தக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். ’ மனோகரா தமிழ் சினிமாவின் முக்கியமான படமாயிற்றே? ’ என்று சிலர் கேட்கலாம். அந்தப் படத்தில் கருணாநிதி எழுதிய ’ பொறுத்தது போதும் பொங்கியெழு ’ போன்ற வசனங்களும், பின்னர் அவர் முதல் மந்திரியாக ஆனதும் திராவிட இயக்க வரலாற்றில் வேண்டுமானால் முக்கியமான நிகழ்வாக இருக்கலாமே ஒழிய உலக சினிமா வரலாற்றில் இது போன்ற படங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. கவனியுங்கள். மனோகரா வெளியான ஆண்டு 1954. இதற்கு அடுத்த ஆண்டு வெளியான சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி உலக சினிமாவின் காவியங்களில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப் படுகிறது. உலகம் முழுவதும் உள்ள திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப் பட்டுள்ளது.
இந்தப் பின்னணியை அறிந்து கொண்டால்தான் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் இடத்தையும், சினிமாவின் உலக நாயகனாக விரும்பும் அவரது ஆர்வத்தில் இருக்கக்கூடிய அசட்டுத்தனத்தையும் புரிந்து கொள்ள முடியும்."
தனது எழுத்தை 50 பேர் படித்தால் தான் தமிழ்நாட்டின் தலை சிறந்த எழுத்தாளன். ஆனால் 45ஆண்டுகள் திரையுலகில் இருந்து பல படங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தி உலகநாயகன் என்று பெயர் எடுக்க ஆசைபட்டால் அது அசட்டுத்தனம். என்ன நியாயம் இது?
கமலை உலகநாயகன் என்று அழைக்க சொல்லி அவர் கேட்கவில்லை. மேலும், உலகநாயகன் என்று அழைக்க நடிப்பை மட்டுமே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உலக நடிகர்களில் நடனம், இசை, பாட்டு, நடிப்பு என்று அனைத்திலும் திறமை உள்ளவர்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் நிச்சயம் அதில் கமல் முதல் இடத்தில் இருப்பார். அதற்காக, அவரை உலகநாயகன் என்று அழைக்கலாம். உலகிலேயே நடிப்புக்காக அதிகம் விருதுகள் வாங்கியவர் என்று கமலை சொல்கிறது விக்கிபீடியா. அதற்காக அவரை உலகநாயகன் என்று அழைக்கலாம். சும்மா இருக்கும் சாருவை என்ன சொல்லி அழைப்பது?
பதேர் பாஞ்சாலி உலக காவியம் தான். ஆனால், அதே வங்காள மொழியில் பல குப்பை படங்களும் உள்ளன/வருகின்றன. அதற்காக வங்காள மக்கள் அந்த படங்களை பார்ப்பதில்லையா என்ன? மகாநதி, அன்பே சிவம் போன்றவை மசாலா இல்லாத நல்ல படங்கள் தான். அந்த படங்களை யார் பார்த்தார்கள்? அன்பே சிவம் வந்த 15 நாளில் மீண்டும் பொட்டிக்கு போனது. படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் படம் நஷ்டம் அடைந்தால் சாரு வீட்டுக்கா வர முடியும்? கமலிடம் தான் போக வேண்டும். நிலைமை அப்படி இருக்க, படத்தில் மக்கள் விரும்புவதை தான் காட்ட முடியுமே தவிர சாரு விரும்பும் உலகத்தரம் எல்லாம் கிடைக்காது. மேலும், சாருவின் தரம் என்ன என்பது அவர் எழுத்தை படிப்பவர்களுக்கு தெரியும்.
சிவாஜிக்கு நற்பெயர் வாங்கி கொடுத்த படம் "முதல் மரியாதை" மட்டும் தானாம். சிவாஜிக்கு உலக சினிமா தெரியாதாம்.உலக சினிமா தெரிந்தால் தான் நடிகனாக முடியும் என்றால் சாரு போன்ற அறிவுஜீவி தான் நடிக்க வேண்டும். ஆனால் அந்த கொடுமையை யார் பார்ப்பது?
(தொடரும்)
1 comment:
Excellent Vasu! I second you!! I am not that updated on this writer and yes, if he has commented in those lines, your post is a fitting reply!
What nonsense is this writer trying to express?
Post a Comment