ஒரே வாக்கியம் தான் சொல்ல தோன்றுகிறது. கம்பெனி பேருக்கும் கம்பெனியில் நடந்ததற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. இத்தனை பெரிய மோசடியின் விளைவு என்ன?
1. உலக அரங்கில் மென்பொருள் துறையால் நமக்கு கிடைத்த பெருமைகள் கொஞ்சம் அடி வாங்கும்.
2. இனி பாலன்ஸ் ஷீட்டை நம்பி ஒரு நிறுவனத்தின் பங்கை யாரும் வாங்க மாட்டார்கள்.
3. தணிக்கை செய்யும் நிறுவனங்கள் மீது நம்பிக்கை குறையும்.
4. பங்குதாரர்கள் இருந்த போதிலும் அவர்களுடன் கலந்து எந்த முடிவும் எடுக்கப்படாததால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய நிறுவனங்களில் மூதலீடு செய்ய அஞ்சுவார்கள்.
இது போல இன்னும் பல.
அதற்குள், ராமலிங்க ராஜுவை ஏன் கைது செய்யவில்லை, அவருக்கு ராஜசேகர ரெட்டி அரசு ஆதரவு இருக்கிறதா என்று பல வதந்திகள் உலவ ஆரம்பித்து விட்டன. 53000தொழிலாளர்களை ஏமாற்றிய ஒருவர் என்ன தான் அரசு மற்றும் காவல் துறையிடமிருந்து தப்பித்தாலும் அவர் ஏமாற்றிய அப்பாவி தொழிலாளர்களின் சாபமும் அவர் தம் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கண்ணீரும் அவரை சும்மா விடுமா என்ன?
2 comments:
Sathyameva Jayathe....
இன்னும் கொஞ்ச நாள்கள் கழித்து எல்லோரும் இதை மறந்து விட தான் போகிறார்கள்..
ராமலிங்க ராஜு & மற்றும் அவரது சகாக்கள் வேறொரு நல்ல கம்பெனி ஆரம்பித்து அல்லது வேறொரு தொழில் செய்ய ஆரம்பித்து இருப்பார்கள்..
ஐந்தாயிரம் கோடி திருடி விட்டு ஆயிரம் கோடியை லஞ்சமாவகவோ அல்லது கட்சி நிதியாகவோ கொடுத்து அந்த ஆளு சுதந்திரமாக தான் உலா வர போகிறார்..
இது போன்று எத்தனை எத்தனை சம்பவங்களை இந்த பாழாய்ப்போன தேசத்தில் நாம் பார்த்து இருக்கின்றோம்..
இப்பொழுது இது மட்டுமே பதிவு செய்ய முடிந்தது..
இன்னும் பேச இந்த தலைப்பில் நிறைய இருக்கிறது..பேசுவேன்...
Post a Comment