Friday 8 May 2009

காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் - 3

காங்கிரஸ் கூட்டணியை பேசுவதற்கு முன்னால் கூட்டணி தலைகளை பார்ப்போம்
- முலாயம் சிங்
- லாலு பிரசாத்
- ராம் விலாஸ் பஸ்வான்
- மம்தா பானர்ஜீ
- கருணாநிதி

எல்லாமே பெரிய தலைகள்...

மேலும் நான் ஏற்கனவே சொன்னபடி மூன்றாம் அணியில் உள்ள பலரும் காங்கிரசை ஆதரிக்க தயங்க மாட்டார்கள் தெலுகுதேசம் போன்ற கட்சியினரை தவிர.நிலையான ஆட்சி எங்கே கிடைக்கும் என்பதை இதனை படிப்பவர் உணர்ந்து கொள்ளலாம்.

இப்போது உள்ள காங்கிரஸ் அரசில் தமிழகத்தின் நிலையை பற்றி பார்ப்போம்,

காபினட் அமைச்சர்கள் - 5
துணை அமைச்சர்கள் - 7

ஆக 12 அமைச்சர்கள் , அதுவும் ஒரு இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து!

இதன் மூலம் தமிழ் நாட்டிற்கு எத்தனை லாபம் என்று யாருமே யோசிக்க தயாரில்லை, எப்போதும்
உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே சிந்திப்பதுதான் தமிழ்நாட்டிற்கு வந்த சாபக்கேடு போலும்.

எவ்வளவு மேம்பாலங்கள் , ரயில் தண்டவாள பணிகள், தமிழிற்கு செம்மொழி அந்தஸ்து, கடல் சார் கல்வி பல்கலை கழகம் இன்னும் என்னனவோ.

ஆக, இத்தனையும் செய்தும் மக்களுக்கு அது கண்ணில் தெரியவில்லை. மூளையை தீர்மானமாக
உபயோகிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டனர் போலும்.

இதன் மூலம் சோனியா ஈழத்தமிழரை கொல்லுவதை நான் நியாயபடுத்தவில்லை மாறாக இவ்வளவு செல்வாக்கு இருந்தே ஒன்றும் செய்ய முடியாத தமிழக அரசு, செல்வாக்கே இல்லாமல் அல்லது பலமான மத்திய அரசு இல்லாமல் ஈழத்தில் என்ன செய்ய முடியும் என்றே கேட்கிறேன்.

இப்போதுள்ள சூழ்நிலையில் ஈழப்போர் நிறுத்தலில் இந்திய பங்கீடு ஏதாவது இருக்குமானால் அது பாரதிய ஜனதாவால் மட்டுமே முடியும் இதை தி.க முதல் சீமான் வரை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.

ஆனால் தி.மு.க அரசு இதை மக்களுக்கு எடுத்து சொல்ல மறுத்துவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.

இந்த முறையும் தி.மு.க கூட்டணிக்கு 39 தொகுதிகள் வந்தால் முதல் நிபந்தனையாக ஈழப்போர் நிறுத்தம் என்பதை வைக்கலாமே, அதன் பொருட்டே ஆதரவு என்று சொல்லலாமே.ராணுவ அமைச்சகத்தையும் , வெளி விவகாரதுறையையும் வாங்கலாமே. இதுவேதான் நிபந்தனை என்றால் சோனியா நிச்சயம் ஒத்துக்கொள்வார்.

இதன் மூலம் ஈழப்போர் நிறுத்தம் + தமிழகத்திற்கு வழக்கம் போல மத்திய அமைச்சரவையில்
செல்வாக்கு என இரண்டுமே பெறலாம்.

ஆனால் தமிழ்நாட்டினர் வழக்கம் போல 39 எம்.பிக்களை ஒரே கட்சியில் தேர்வு செய்தால் நலம் ,
ஏனெனில் அந்த 39 என்பது பெரிய தொகை , எந்த கூட்டணியில் இருந்தாலும் நமக்கு தேவையான மத்திய அமைச்சரவை கிடைக்கும் , இதில் விஜயகாந்த் புகுந்து குட்டையை குழப்பாதவரை..பார்ப்போம்.

இதனை படிப்பவர் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், நான் ஈழத்தமிழரின் எதிர் திசையில் இருப்பவனல்ல, நானும் அங்கே போர் நிறுத்தம் செய்வதைதான் விரும்புகிறேன் ஆனால் அதற்கு காங்கிரசை தோற்கடிப்பதுதான் ஒரே வழி என்பதில்தான் நான் மாறுபடுகின்றேன்.

No comments: