Tuesday 5 May 2009

Fourth Estate in India


"In old days men had the rack. Now they have the press. That is an improvement certainly. But still it is very bad, and wrong, and demoralizing. Somebody — was it Burke? — called journalism the fourth estate. That was true at the time no doubt. But at the present moment it is the only estate. It has eaten up the other three. The Lords Temporal say nothing, the Lords Spiritual have nothing to say, and the House of Commons has nothing to say and says it. We are dominated by Journalism."

-Oscar Wilde


இவை Oscar Wilde இங்கிலாந்து இதழியல்(ஜர்னலிசம் என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் இதழியல் தானே?) துறையை பற்றி கூறியவை. அவர் வாழ்ந்த காலகட்டம் 1854-1900. அப்போதே இப்படி சொல்லியிருக்கிறார். சரி, இங்கிலாந்தை விடுவோம். நம்ம ஊருக்கு வருவோம். செய்திகளை வானொலி, தொலைகாட்சி, பத்திரிகை மற்றும் இன்டர்நெட் மூலம் தெரியப்படுத்தும் இதழியல் துறை இந்தியாவில் எப்படி இருக்கிறது?

குற்றம் - நடந்தது என்ன?,நிஜம்,பெண்கள் கற்பழிப்பு - பீதியில் உறையும் கிராமம், கண்ணழகி நடிகையின் கிழக்கு கடற்கரை சாலை பின்னிரவு விசிட்டின் பின்னணி என்ன? போன்ற மக்களை சுண்டி இழுக்கும் இலக்கிய தரம் வாய்ந்த தலைப்புகளுடன் கன ஜோராக இதழியல் வியாபாரம் தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நடக்கிறது.

இதை பற்றி பேசும் போது மும்பை தாக்குதல் சம்பவம் நினைவுக்கு வருகிறது. அந்த தாக்குதல் நடந்த பின் இஸ்ரேல் நம் நாட்டை கேட்டது ஒன்று தான். "போலீஸ், கமாண்டோ ஆகியோரின் அணுகுமுறையை ஏன் டிவி,வானொலி,இன்டர்நெட் என்று ஒன்று விடாமல் வெளியிட அனுமதித்தீர்கள் ? உள்ளே இருந்த தீவிரவாதிகளுக்கு இந்த செய்திகளை எல்லாம் நீங்களே கொடுத்து உதவி செய்யலாமா என்றார்கள்?". யாரும் இதற்கு பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அரசால் தொலைகாட்சி, பத்திரிகை என்று யாரையும் தடை செய்ய முடியவில்லை.இவர்கள் அரசை தாண்டி போய்விட்டார்கள். மேலும், இதை நடத்துபவர்கள் பெரும்புள்ளிகள்.அவர்களை பகைத்துக்கொள்ள அரசால் முடியாது.

நான் சிங்கப்பூரில் ஒரு ஆறு மாத காலம் இருந்தேன். "The Straits Times" என்று ஒரே ஒரு ஆங்கில பேப்பர் தான் தினசரி அங்கே வெளிவரும். இதைத் தவிர சில உண்டு. ஆனால் மக்கள் அதிகம் வாங்குவது Straits Times தான். நான் கேள்விப்பட்ட வரை சிங்கப்பூரில் அரசின் அனுமதி இல்லாமல் எந்த செய்தியையும் பத்திரிகைகள் வெளியிட முடியாது. சிலர் இதை பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனலாம். ஆனால், சுதந்திரத்தை கொடுத்து விட்டு நம் நாடு போல் கஷ்டப்படுவதை விட இது எவ்வளவோ மேல்.

நிஜம், குற்றம்-நடந்தது என்ன போன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வரும் ஆனால் அவை educative ஆக இருக்கும். உதாரணமாக, கொள்ளை நடந்த விதம், வீட்டில் உள்ளவர்கள் செய்த எந்த தவறால் அது நடந்தது, அதை எப்படி தடுத்து இருக்கலாம் போன்றவை. சாமியாரின் பித்தலாட்டம்,பேய் உள்ள கிராமத்தில் ஒரு நாள் தங்குவது போன்ற கீழ்த்தரமான செய்திகளை எல்லாம் டிவியில் பார்க்க முடியாது. சிங்கப்பூர் மட்டுமல்லாமல் பெரும்பாலான நாடுகளில் தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.

சினிமாவில் வரும் காட்சிகளை சென்சார் செய்ய ஒரு துறை இருப்பது போல் இந்தியாவில் பத்திரிகைகளுக்கு எதாவது அமைப்பு உள்ளதா என்று தெரியவில்லை.அப்படி ஒன்று இருந்தால் அதையும் தாண்டி எப்படி சில பத்திரிகைகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற செய்திகளை பிரசுரிக்கின்றன என்று புரியவில்லை.

மீண்டும் மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு வருவோம். அந்த தாக்குதல் சம்பவத்தில் பிடிபட்ட ஒரே குற்றவாளியான கசாபின் நடவடிக்கைகள் பற்றி நம்மூர் பத்திரிகைகள் எழுதாத நாள் இல்லை. Close Up பேஸ்ட் கேட்டார் கசாப். படிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட கசாபின் மனு தள்ளுபடி என்று உப்பு சப்பு இல்லாத செய்திகளை வெளியிடுவதோடு மட்டுமில்லாமல் கசாபை எதோ விடுதலை போராட்ட வீரர் அளவுக்கு சித்தரிக்கின்றன பத்திரிகைகள்.இதெல்லாம் கூட பரவாயில்லை. கசாபின் வயது என்ன என்று தெரிந்துகொள்ள நடத்தப்படும் சோதனைகள் குறித்து விலாவாரியான தகவல்கள். கொஞ்சம் விட்டால் "எப்படி எப்படி சமைஞ்சது எப்படி - கசாபின் கண்ணீர் கதை" என்று ஒரு தலைப்பு கொடுத்து தொடர்கதை ஆரம்பிப்பார்கள் போலும். இவர்கள் இப்படி உசுப்பேற்றி கசாப் அடுத்த தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் சரி.

No comments: