Friday 5 February 2010

கஜா கா தோஸ்த் பேசறேன் - கடைசிப் பகுதி

இபன் பதுதா பண் கடை கட்டிடம்(Ibn Battuta Mall) என்ற பெயரை ஒரு பேருந்தில் பார்த்த போது இந்த பெயரை எங்கோ கேட்டு இருக்கிறோமே என்று யோசித்தேன். பிறகு தான் சாரு நிவேதிதா அவர்கள் எழுதிய இபன் பதுதாவின் "Rihla" என்ற அற்புதமான பயணக்கட்டுரை நினைவுக்கு வந்தது.அதே போல் நான்சி அஜ்ரம் பாடல்களை பல அரேபிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேட்டேன்.இவர்களை அறிமுகப்படுத்திய சாருவுக்கு நன்றி

கதாநாயகன் படத்தில் வரும் பாண்டியராஜன் மற்றும் எஸ்.வி.சேகர் போல இந்தியர்கள் பலர் ஷேக் டிரஸ் போட்டுக்கொண்டு மலபார்/காஜா பீடி புகையும் வாயோடு பார்த்த உடனே அவர்கள் ஷேக் இல்லை என்று தெரிகிற மாதிரி துபாயில் உலவுகிறார்கள்.
பள்ளி தொடங்கி இளங்கலை/முதுகலை பட்டம் வாங்கும் வரை கக்கூஸ் சுவர்களில் எழுதிப் பழகிய தமிழன் துபாய் சென்றவுடன் அதை மறந்து விடுவானா?

"மலையாள பெண்களை பார்த்த மாத்திரத்தில் பற்றி எரியும் தன் உடல் வேட்கை பற்றியும், அரேபிய/தமிழ்/மலையாள பெண்களின் அங்கங்களை வரைந்து பாகங்களை குறிப்பிட்டு ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கவும் துபாய் பேருந்து இருக்கைகள் அவனுக்கு பெரிய அளவில் உதவுகின்றன".

நம்மூர் மக்களின் அடக்க முடியாத காம இச்சையின் விளைவால்,துபாய் அரசு "Al Qusais" போன்ற கேம்புகள் இருக்கும் பகுதிக்கு விடும் பேருந்து இருக்கைகளை விரைவில் பேனா மற்றும் பென்சிலால் எழுத முடியாதபடி மாற்றியமைக்க வாய்ப்புண்டு.ஆனால், தமிழனை பாராட்ட வேண்டும். காமத்தோடு நிற்காமல், அரேபியர் மற்றும் மலையாளிகளை பச்சை பச்சையாக திட்டுவது, கவிதை எழுதுவது என்று பாரபட்சம் பார்க்காமல் எழுதித் தள்ளுகிறார்கள்.

இறுதியாக, துபாய் அரசு வீட்டுப் பிராணிகள் வளர்ப்பதில் ஏதேனும் தடை விதித்திருக்கிறதா என்று தெரியவில்லை.நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்லும் இளைஞர்/யுவதிகளோ அல்லது நாய் வாக்கிங் அழைத்துச் செல்லும் தொப்பை மாமா/மாமிகளையோ துபாயில் பார்க்கவே முடியவில்லை.

2 comments:

Mohan said...

ரொம்ப அழகாக 'துபாய்' பற்றி விவரித்திருந்தீர்கள்.கொஞ்சம் சீக்கிரமாகவே இந்தத் தொடரை முடித்தது போல் ஒரு உணர்வு.

Vasu. said...

நன்றி திரு.மோகன். இன்னும் எழுதலாம் என்று தான் நினைத்திருந்தேன்.ஆனால், எனக்கே கொஞ்சம் மொக்கை போடுவது போல் தோன்றியது.அதான் முடித்து விட்டேன். :-))