Wednesday 29 December 2010

இசை விமர்சகர்கள்

இசையை ரசிப்பதோடு நிற்காமல் அதைப் பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்பவர்களை விமர்சகர்கள் எனலாம். இப்படி விமர்சனம் செய்ய இசையில் நல்ல ஞானம் வேண்டும். ஆனால், அவர்கள் இசையை தங்கள் தொழிலாக கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்த பதிவு கர்நாடக இசை விமர்சகர்களை பற்றியது.

கர்நாடக இசை விமர்சகர்களில் முதன்மையானவர் காலம் சென்ற பி.வி.சுப்ரமணியம் என்கிற "சுப்புடு".சுப்புடுவின் விமர்சனத்துக்கு மறைந்த செம்மங்குடி சீனிவாச ஐயர் கூட தப்பிக்கவில்லை."எமர்ஜன்சி என்கிற கொடுமை கூட முடிவுக்கு வந்துவிட்டது ஆனால் செம்மங்குடிக்கு முடிவு வரவில்லை" என்ற சுப்புடுவின் விமர்சனம் 1970களில் மிகப் பிரபலம். ஒரு கட்டத்தில் செம்மங்குடி "நானும் வெட்கம் இல்லாம வருஷா வருஷம் பாடிண்டு இருக்கேன், நீயும் வெட்கம் இல்லாம வருஷா வருஷம் எழுதிண்டு இருக்கே" என்றார். "நாய்கள் மற்றும் சுப்புடுவிற்கு இங்கு அனுமதி இல்லை" என்று மியூசிக் அகாடமி 1980 களில் போர்டே வைத்தது.

சுப்புடு அளவிற்கு விமர்சனத்திற்காக புகழ் பெற்றவர்கள் யாருமில்லை என்றாலும், SVK,U.K, G.Swaminathan, Lakshmi Venkatraman, H.Ramakrishnan(வானமே எல்லை படத்தில் நடித்தவர்) போன்றவர்கள் இன்று கர்நாடக இசை விமர்சன உலகில் பிரபலமான பெயர்கள்.

இங்கே திரு.ராமகிருஷ்ணன் அவர்களை பற்றி கொஞ்சம் பேச வேண்டும். மாற்றுத் திறனாளியான இவர் செய்திருக்கும் சாதனைகள் பல. திருவையாறு தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும் பங்கேற்று மற்ற வித்வான்களை போல முழு மேடை கச்சேரி செய்பவர். மிருதங்கம்,கஞ்சிரா வாத்தியங்களை கற்றவர். கொன்னக்கோல் பயிற்சியும் பெற்றவர். ஸ்ரீ பைரவி கான சபா என்ற பெயரில் சென்னையில் சபா ஒன்றை அமைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.தமிழக அரசின் "கலைமாமணி" விருது பெற்றவர். நிகழ்ச்சி வழங்கியவரை ஊக்குவிக்கும் வகையிலேயே இவர் விமர்சனங்கள் இருக்கும். இன்றைய ஹிண்டுவில் கூட ஸ்ருதி சாகர் மற்றும் லக்ஷ்மி ரங்கராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளை விமர்சித்திருந்தார்.

மற்ற விமர்சகர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் விமர்சனங்களை படிப்பதோடு சரி.

2 comments:

bandhu said...

தமிழ் பேப்பரில் எழுதும் லலிதா ராம் பதிவர்களில் ஒரு நல்ல இசை விமர்சகர். தினமணியில் வரும் இசை ரசிகனின் உலா ஒரு தேர்ந்த விமர்சனமாக இருக்கிறது

I highly recommend both.

Gokul said...

சுப்புடுவிற்கு பிறகு அந்த அளவிற்கு புகழ் பெற்றவர் யாரும் இல்லை , ஆனால் வளர்ந்து வரும் விமர்சகரான வா.தேவன் பற்றி நீ குறிப்பிடவேயில்லையே ! சுப்புடுவின் வாரிசு இவரென விகடனில் போன வாரம் கட்டுரை கூட வந்ததே.