Sunday 3 May 2009

காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்-1


இப்போது தமிழ்நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான ஒரு அலை அடிக்கிறது, அதாவது காங்கிரசை எதிர்க்க வேண்டும், காங்கிரஸ் தமிழ்நாட்டில் இல்லாமல் போக வேண்டும் என்று ஒரு சாரார் மிகவும் தீர்மானமாக இருக்கின்றனர்.

இது சரியா?

இதனால் தமிழகத்துக்கு என்ன லாபம் என்று பார்ப்போம். இந்தியாவிலேயே காங்கிரசுக்கு ஒரு உருப்படியான கூட்டணி அமைந்தது தமிழ்நாட்டிலும் பெங்காலிளும்தான் (அதாவது கௌரவமான தொகுதி பங்கீடு) (ஆந்திராவிலும் கர்நாடாகவிலும் காங்கிரஸ் அதன் சொந்த பலத்திலேயே நிற்கிறது). எனவே தி.மு.க கூட்டணி காங்கிரசுக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது. தமிழ்நாடும் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது.

முதலில் காங்கிரசினால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் என்ன நடக்கும்

1. பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.
2. Third front கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.

மேற்கண்ட இரண்டு option-களுமே கூட்டணி ஆட்சிதான் தவிர்த்து abosolute mejority ஆட்சி அல்ல.

எந்த ஆட்சி அமைந்தாலும் அ.தி.மு.க , பா.ம.க , பிரஜா ராஜ்யம், தெலுங்கு தேசம், ஜனதா தளம் (s),பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி , ராஷ்ட்ரிய ஜனதா தள் போன்ற பிராந்திய கட்சிகள் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் , அவரவர் பலத்திற்கு ஏற்ப.இதில் எந்த கட்சியும் பாரதிய ஜனதா கூட்டணியில் இல்லை என்பது தெரிந்த விஷயம். எனவே எவர் ஆட்சி அமைக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல இந்த கட்சிகள் தமது ஆதரவு / எதிர்ப்பு நிலையை மாற்றிக்கொள்ளும்.

இப்போது இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து பாரதிய ஜனதாவை ஆட்சியில் ஏற்றலாம் , ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு ஏனென்றால் காங்கிரசுடன் ஒரு முக்கிய எதிர்க்கட்சியான கம்யுனிசட்டுகளும் இந்த கூட்டணிக்கு எதிர்த்தே வாக்களிப்பர். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை பற்றி கவலை இல்லை , அவர்களும் அ.தி.மு.க தெலுகு தேசம் போல பெரிய கொள்கை எல்லாம் இல்லாத கட்சிகள், மேலும் தனக்கு மந்திரி சபையில் எந்த portfolio வரும் என்பதில்தான் குறிக்கோள்களுடன் இருக்கும் , லாலு பிரசாத்,ராம் விலாஸ் பஸ்வான் போன்றவர்களும் இதே ரகம்தான், மேலும் பா.ஜா. கூட்டணிக்கு வருவதை விட காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பானது (மதச்சார்பின்மை மதச்சார்பின்மை...),முலாயம் சிங்கும் atleast home minister-ஆக வருவதற்கு ஆசைப்படுவார்.

எனவே எல்லாம் கொடுத்துவிட்டு பா.ஜா ஆட்சிக்கு வர வேண்டும், இந்த லட்சணத்தில் இலங்கையை கண்டிக்க வேண்டும், போகாத ஊருக்கு வழி கேட்பது மாதிரிதான் இதுவும்.முலாயம் சிங், லாலு மாயாவதி போன்றவர்கள் இலங்கை யுத்தத்தை 'அர்ஜென்டினாவுக்கும்' 'பொலிவியாவிர்கும்' நடக்கும் யுத்தம் போலவே பார்ப்பர்.

இதில் அ.தி.மு.க கூட்டணியும் இடம் பெறும்,இந்த இடத்தில் ஜெயலலிதாவின் குணத்தை நாம் நினைவு படுத்திக்கொண்டு பார்க்க வேண்டும், அதாவது அவருக்கு மத்திய அரசிடம் பேசி அதன் ஒரு பகுதியாக இருந்து பழக்கமில்லை , அதற்கு அவரின் குணாதிசயம் ஒத்துக்கொள்ளாது, இனிமேல் அதுபோல் நடந்தால் அது அதிசயமே , இந்த லட்சணத்தில் அவர் "தனி ஈழம் அமைத்து தரப்படும்" என்று வேறு கூறுகிறார், எனவே ஈழ பிரச்சினை அடிப்படையில் அவர் மத்திய அரசை கவிழ்க்கவே பார்ப்பார் (அதனை ராமதாஸ் எதிர்ப்பார், வைகோ ஆதரிப்பார் ... தலை சுத்துதுடா சாமி..) தவிர உருப்படியான ஒரு செயலை செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

எனவே பா.ஜ கூட்டணி வருவது மிகவும் கடினம் ஏன் என்றால்,

0.பா.ஜ வை தவிர பெரிய கட்சிகள் கூட்டணியில் இல்லை.

1. பா.ஜ விற்கு போதிய அளவில் சீட்கள் (அதாவது 190-200 என்ற அளவில்),வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

2. அத்வானி இப்போது கையில் எடுத்து இருக்கும் சுவிஸ் பாங்க் கருப்பு பணம் விவகாரம் எல்லோருக்கும் (அதாவது பெரும்பான்மையான அரசியல்வாதிகளுக்கு) எரிச்சல் தரக்கூடிய விஷயம்.

3. பா.ஜ விற்கு ஆதரவு கொடுப்பது நீண்ட கால நலன்களுக்கு பல கட்சிகளுக்கு எதிரானது.தங்களது minority vote bank போகக்கூடும் என்று அஞ்சுவார்கள்.(லாலு, ராம்விலாஸ் பஸ்வான் முலாயம் , இவர்கள் இப்போது காங்கிரஸ் கூட்டணியில்)

4.அப்படியே ஆட்சி அமைத்தாலும் மாயாவதியோ லாலுவோ பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவார்கள்.

5.கம்யுனிசட்டுகளின் ஆதரவு கிடைக்காது

அடுத்து மூன்றாம் அணி ஆட்சி...

-தொடரும்

3 comments:

Online Bank said...

if you say like this, suppose congress selected then again they will supply the weapons to srilankan government with licence. Licences means Tamilnadu peoples agreed to supply the weapons to srilanka,by the way of voting to congress. Now we are hearing the NEWS that daily 100 of Tamilpeoples killed by srilanka government, but after the selection of congress we will hear that daily 500 Tamilpeoples killed by srilankan army.......is it the one you want?..........velmurugan madurai

Deepan said...

why should i vote for congress???
to kill those innocent tamilians??
just 10 more days!!!
we r going to teach a bitter lesson to Congress and its allies....

Gokul said...

நீங்கள் கேட்பது உண்மை ஆனால் அதற்கான பதில் கருணாநிதியின் புத்திசாலிதனத்தில் இருக்கிறது.

நான் சொல்ல வருவது இதுதான்,

காங்கிரஸ் கூட்டணி தவிர்த்து மற்ற கூட்டணிகளால் ஆட்சி ஏற்படுத்த முடியாது என தெரியும்போது, அதில் தமிழர்கள் ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியாக இருக்கும்போது அதை ஏன் தமிழ் ஈழ நலன்களுக்காக பயன்படுத்த கூடாது? (இப்போது சக்தி வாய்ந்த கூட்டணியாக இருந்து என்ன கிழித்து விட்டார்கள் என நீங்கள் சொல்வது கேட்கிறது, ஆனால் இருப்பதிலேயே தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து அதன் மூலமாக சோனியாவை மேலும் நெருக்குவதுதான் இப்போதுள்ள practical வழி அதை விட்டு விட்டு காங்கிரசை தொர்க்கடித்தோமானால் ஈழத்தமிழற்கும் லாபமில்லை இந்திய தமிழர்க்கும் (இப்போது இருக்கும் தேசிய அளவில் 12 மந்திரிகள்) லாபமில்லை.

மேலும் இந்த ஒரு கட்டுரையை மட்டும் படிக்காமல் இந்த blog-இல் இருக்கும் இதன் தொடர்ச்சி கட்டுரைகளை படியுங்கள்.

வருகைக்கு நன்றி

-gokul