Monday 22 June 2009

ஒரு கிராம் தங்கம் வேணுமா?

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டப்பட்டால் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு - முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மேயர் சுப்ரமணியம் அறிவிப்பு.

இது என்ன ஸ்டண்ட் என்று புரியவில்லை. உயிர் போய்விடுமோ என்று பயந்து அரசு மருத்துவமனைகளுக்கு வராத மக்களை ஈர்க்க இப்படி ஒரு கவர்ச்சி திட்டமா? இல்லை ஒருவேளை தமிழ்நாட்டில் மக்கள்தொகை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று நினைத்து அதை அதிகரிக்க முயற்சிக்கிறாரா மேயர்? இந்த மாதிரி அறிவிப்பை எல்லாம் நம்மூரில் செய்வது பெரிய ஆபத்து. எட்டு கிராம் சேர்த்தால் ஒரு பவுன் ஆகிவிடும் என்று எட்டு குழந்தைகள் பெற்று கொள்கிற கிங்கரன்கள் வாழும் தேசம் இது. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.

சரி, மேலே சொன்ன பிரச்சனை ஒரு பக்கம். எது தமிழ் பெயர் என்பதிலேயே குழப்பம் இருக்கிறதே? உதாரணமாக, ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா? ஆனால், இந்த பெயர் வைக்கப்படும் குழந்தைக்கு ஒரு கிராம் தங்கம் கிடைக்கவில்லை என்றால் அது பகுத்தறிவு பகலவனை பகைத்துக்கொள்வது போல் ஆகாதா? மேலும், பகுத்தறிவின் பொருட்டு இந்து பண்டிகைகளை கொண்டாடாத ஆனால் ரம்ஜான் நோன்பில் கூழ் குடிக்கிற/கிறிஸ்துமஸ் கேக்கை அவர்களுடன் பகிர்ந்து உண்ணுகிற நம் முதல்வர் அந்த மதத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பெயர்கள் எப்படி தமிழில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்? மைனாரிட்டி ஓட்டுக்களை பாதிக்கும் இப்படி ஒரு முடிவை எப்படி கழக தந்தை தவறவிட்டார்?

ராமதாஸ் தான் கூட்டணியை விட்டு போய்விட்டாரே? இன்னும் எதற்கு இந்த தமிழ் பித்து? அது சரி, ராமதாஸ் அடுத்த வருஷம் அவர் பிறந்த நாளைக்கு இந்த திட்டத்தை அமல்படுத்திவிட்டார் என்றால் "தமிழ் காவலர்" பட்டம் அவருக்கு போய்விடுமே.

7 comments:

Zahoor said...

வாசு, முகமதுவை கள்லோடு ஒப்பிட்டு எழுதியது முற்றிலும் தவறாகும். மதுவை தடை செய்யுமாறு கூறியவர் முகமது நபி (ஸல்) அவர்கள். உங்களின் மாசற்ற நோக்கம் புரிகிறது, ஆனால் மற்ற அன்பர்கள் இதைப் பார்க்கும் போது அவர்கள் மனம் புண்படும். சமந்தப்பட்ட பகுதியை நீக்குமாறு கேட்டுகொள்கிறேன். தயவுசெய்து வேறு உதாரணத்தை எடுத்துக்கொள்ளவும்.

நம் நாட்டின் சமுதாய அவலங்களை சிறப்புடன் சுட்டிகாட்டி வரும் இந்த வலைப்பூவில், இது ஒரு கரும்புள்ளியாக அமைவதை நான் விரும்பவில்லை.

நன்றி.

Vasu. said...

zahoor,

தவறுக்கு மன்னிக்கவும். சம்பந்தப்பட்ட பகுதியை நீக்கிவிட்டேன்.

Gokul said...

Zahoor,

ஏன் பெயர் கோகுல் , வாசுவின் நண்பன். உங்களுடைய உணர்வு எனக்கு புரிகிறது, வாசுவும் அதை புரிந்து கொண்டு அந்த பதிவை மாற்றிவிட்டார்.

ஆனால், உங்களுக்கே தெரியும் இந்த பதிவில் முஹம்மது ஸல் அவர்கள் எந்த விஷயத்திலும் சம்பந்த படவில்லை என்று. வாசு, அங்கே கையாண்டது ஒரு சொல் விளையாட்டு, அவ்வளவே. எனவே நீங்கள் இந்த சிறு விஷயங்களுக்கு எதிர்வினை அளிப்பது மிகுந்த திகைப்பை அளிக்கிறது.

புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

Zahoor said...

கோகுல், முஹம்மது நபி (ஸல்) மற்றும் குடிப் பழக்கம், இவை இரண்டும் சிக்கலான விஷயங்கள். இதன் முக்கியத்துவத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

வாசு ஒரு ரைமிங்காக இதை இரண்டும் தொடர்புபடுத்திவிட்டார். இது மிகவும் சாதாரண விஷயமே. ஆனால் இதைப் போன்றே ஒரு சாதாரண கார்டூனுக்காக டென்மார்க் சந்தித்த எதிர்ப்புகளும், அந்நாட்டின் பொருளாதாரமே தடுமாறியதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
(http://en.wikipedia.org/wiki/Economic_and_social_consequences_of_the_Jyllands-Posten_Muhammad_cartoons_controversy).

என்னுடைய கருத்தை நான் எதிர்விளைவாக நினைக்கவில்லை. அது ஒரு வேண்டுகோள் மட்டுமே. உங்களுடைய கருத்தை சொல்லியதற்கு நன்றி.

வாசு, வேண்டுகோள் நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி. :) சில நாட்களாக பதிவுகள் வேகமாக வருவதில்லை, தினமும் ஒரு பதிவையாவது போடவும். :)

Zahoor said...

பி. கு. முஹமது என்றால் அது முஹமது நபி (ஸல்) அவர்களையே குறிக்கும்.

Gokul said...

Zahoor,

நீங்கள் கொடுத்த சுட்டியை பார்த்தேன் , நான் அந்த cartoon விவகாரம் பற்றி படித்திருந்தாலும் , இந்த அளவிற்கு வெடித்தது என்று தெரியாது.

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.

Vasu. said...

Zahoor,

தினமும் ஒரு பதிவு எழுத எனக்கும் ஆசை தான். ஆனால், கொஞ்சம் தரத்தோட எழுத வேண்டும் என்று முயற்சிப்பதால் நேரம் எடுக்கிறது. உடனே இப்போது எழுதுவது எல்லாம் தரமானதா என்று கேட்காதீர்கள். நான் முயற்சி செய்கிறேன் என்று தான் சொன்னேன். :-))